என்னிடம் காசு கிடையாது… மக்கள் காசு கொடுப்பார்கள்… சொல்கிறார் கமல்ஹாசன்
Recommended Video

திருநெல்வேலி : என்னிடம் காசு கிடையாது; மக்கள் காசு கொடுப்பார்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுவை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தொகுதி பங்கீடு செய்யும் கட்சிகளை குரங்குகள். உண்மையான மக்களாட்சி என்ன என்பதை இந்த தலைமுறையாவது பார்க்கட்டும்.

என்னிடம் காசு கிடையாது
எனக்கு மக்கள் காசு கொடுப்பார்கள்: என்னிடம் காசு கிடையாது. மக்களை நம்பி நான் வந்து இருக்கிறேன். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் . ஓட்டுக்கு காசு வாங்குவதுதான் அசிங்கம். எதிர்காலத்திற்காக காசு கொடுப்பது தவறு கிடையாது. ஒரு வருடத்திற்கு சினிமா பார்க்கும் செலவில் கொஞ்சம் எனக்கு கொடுங்கள்.

நிதி கொடுங்கள்
உங்களை என் குடும்பமாக நினைத்து காசு கேட்கிறேன் . இதுதான் என்னுடைய நேர்மை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது: மக்கள் காசு கொடுப்பார்கள் . வேலையை துவங்க போகிறோம்: கள வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். www.maiam.com - ல் நிதி அளியுங்கள் எங்களுக்கு என்றார்.

தேர்வு செய்யுங்கள்
ஊழலுக்கு எதிராக யாரும் எங்களிடம் வரலாம். வாரிசு அரசியலுக்கு எதிரானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். நாட்டில் மாற்றத்தை விரும்புபவர்கள் தேர்தலுக்கு வாருங்கள். உங்கள் பகுதியில் நீங்கள் நம்புபவர்களை தேர்வு செய்யுங்கள். நாங்கள் பல அறிஞர்களிடம் பேசி வருகிறோம் . கொள்கைகள் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறோம். மக்கள் விரும்பினால் கொள்கைகளை காட்டுவேன் .

வரி செலுத்துகிறேன்
ஆனால் இதற்கு முன் மக்கள் கொள்கையே பார்க்கவில்லை. என்னுடைய முக்கிய கொள்கை நேர்மைதான்: அது யாரிடமும் இல்லை மேலும், நான் சரியாக வரிக்கட்டி வருவதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications