பஸ்சில் ஏறினர்.. விஷத்தை எடுத்தனர்.. செத்துப் போன கள்ளக்காதல் ஜோடி!
ஓடும் பஸ்ஸில் கள்ளக்காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்டது.
Recommended Video

நெல்லை: பஸ் ஓடிக் கொண்டிருக்கும்போதே விஷத்தை சாப்பிட்டு கள்ளக்காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்தவர் நயினார். இவருக்கு திருமணமாகி இலக்கியா என்ற மனைவியும், ரஞ்சனா என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர். இலக்கியாவுக்கு வயசு 22.

மகள் வரவில்லை
கடந்த 5-ம் தேதி அம்மா வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு, குழந்தையையும் தூக்கிக் கொண்டு இலக்கியா சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவே இல்லை. மாமியார் வீட்டுக்கு நயினார் போன் செய்தபோது அங்கும் தங்கள் மகள் வரவில்லையே என்று சொல்விட்டனர். இதனால் நயினார் உட்பட எல்லோருமே இலக்கியாவை தேடினார்கள். அதனால் போலீசிலும் புகார் அளித்தனர்.

சாய்ந்து கிடந்தனர்
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசாரும் இலக்கியாவை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து சாத்தான்குளத்துக்கு அரசு பஸ் ஒன்று கிளம்பியது. அந்த பஸ்ஸில் ஆணும், பெண்ணும் கையில் குழந்தையுடன் ஏறினர். பஸ் போய்க் கொண்டே இருந்தபோது, அந்த பெண்ணும், ஆணும் மயங்கியபடியே தங்கள் சீட்டில் சாய்ந்து கிடந்தனர். அவர்கள் தூங்குவதாக மற்ற பயணிகள் நினைத்து விட்டனர்.

பயணிகள் எழுப்பினர்
ஆனால் குழந்தை மட்டும் அழுது கொண்டே இருந்தது. ரொம்ப நேரம் குழந்தை அழுதும், கவனிக்காமல் தூங்கிக் கொண்டே இருப்பதாக நினைத்த பயணிகள் அவர்களை எழுப்பினர். பிறகுதான் தெரிந்தது அவர்கள் மயங்கி விழுந்திருக்கிறார்கள் என்று!!

விஷம் அருந்தி தற்கொலை
உடனே டிரைவர் வண்டியை நேராக ஆஸ்பத்திரிக்கு ஓட்டினார். மயங்கி கிடந்த இருவரையும் பொதுமக்களே கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். செக் செய்து பார்த்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே விஷம் குடித்து இறந்து விட்டார்கள் என்று சொன்னார்கள். இதுகுறித்து பிறகு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்காதலன்
அவர்களும் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவர்கள் வைத்திருந்த பர்ஸ்-ல் ஆதார் அட்டையை எடுத்து பார்த்தபிறகுதான் தெரிந்தது இறந்துபோனது காணாமல் போன இலக்கியா என்பது. அவர் கூடவே இறந்தது இலக்கியாவின் கள்ளக்காதலனாம்! அவர் வேறு யாருமில்லை... மனைவியை காணாமல் தேடி கொண்டிருக்கும் நயினார் அண்ணனாம்!
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications