தென்காசி அருகே இனோவா கார் மோதி விபத்து.. போலீஸ் கான்ஸ்டபிள் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி அருகே மதுரை - புளியங்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் மெதுவாக சென்றுகொண்டிருந்த போலீசார் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் பலியாகினார். மேலும் ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் மதுரை - புளியங்குடி சாலையில் வம்ச விருத்தி நகர் அருகே போலீசார் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

தலைமை காவலர் சுந்தரய்யா, காவலர் மருதுபாண்டி உள்ளிட்டோர் அங்கு வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வேகமாக வந்த இனோவா கார்

வேகமாக வந்த இனோவா கார்

தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புளியங்குடி - மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து தென்காசி நோக்கி ஒரு இனோவா கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. வம்ச விருத்தி நகர் அருகே சென்றபோது திடீரென அந்த இனோவோ கார் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த கார் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த போலீசார் மீது மோதியது.

போலீஸ் கான்ஸ்டபிள் பலி

போலீஸ் கான்ஸ்டபிள் பலி

இதில் போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் சுந்தரய்யா, மருதுபாண்டி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உடனடியாக 2 போலீஸ்கார்களையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் சுந்தரய்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

2 பேருக்கு சிகிச்சை

2 பேருக்கு சிகிச்சை

மற்றொரு போலீஸ்காரர் மருதுபாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கார் மோதியதில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு நபரும் படுகாயமடைந்தார். அவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து நடந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த புளியங்குடி போலீசார் விபத்தை ஏற்படுத்திய இனோவா கார் டிரைவரை கைது செய்தனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் டிரைவர் கைது

கார் டிரைவர் கைது

இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில், போலீசார் இருவரும் மோட்டார் சைக்கிளில் செல்கினறர். அப்போது எதிரே வரும் கார் ஒன்று போலீஸ்காரர்கள் மீது நேருக்குநேர் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி மக்களை பதைபதைக்க வைத்துள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் கார் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+