எரிந்த நிலையில் கிடந்தது ஜெயக்குமார் தானா? உறுதி செய்ய எலும்புகள் டி.என்.ஏ சோதனைக்கு அனுப்பி வைப்பு!
நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் எரிந்த நிலையில் கிடந்த நிலையில், எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த மே 4ஆம் தேதி அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். ஜெயக்குமார் தனசிங்கை காணவில்லை என அவரது மகன் புகார் அளித்த அன்றே எரிந்த நிலையில் தோட்டத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது.

காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மர்ம மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இறந்த நிலையில் கிடந்த அவரது உடலின் உறுப்புகள் உடற்கூராய்வில் மிகவும் கவனமாக ஆராயப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இறந்து கிடந்த ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலுமாக எரிந்துள்ளது தெரியவந்துள்ளது. இறந்தவரின் உடலை எரித்தால் தான் குரல்வளை முற்றிலும் எரியும் என்பதால் கொன்றுவிட்டு, எரித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் உடற்கூறாய்வு அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவக் குழுவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவரது கால்கள் கட்டப்பட்டிருந்ததும் வயிற்றின் மேல் பகுதியில் ஒரு இரும்பு தகடு இருந்ததும் உடற்கூறாய்வில் தெரியவந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என போலீசார் சந்தேகித்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது ஜெயக்குமார் தானா என்ற சந்தேகம் அவரது குடும்பத்தினருக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையிலேயே டி.என்.ஏ பரிசோதனைக்கு எலும்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு வாரத்திற்குள் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டிஎன்ஏ அறிக்கை வந்தவுடன் அவரது மகன் மற்றும் மனைவியின் டிஎன்ஏக்களை ஒப்பிட்டு உறுதி செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!











Click it and Unblock the Notifications