என் சங்கீதாவா இப்படி.. நம்பவே முடியலயே.. மரிய புஷ்பம் எடுத்த சோக முடிவு!
நெல்லை அருகே காதல் ஜோடி ஒன்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளது
Recommended Video
நெல்லை: டிக்-டாக்கில் ஆடி.. பாடி.. பழகின சங்கீதாவா இப்படி என்று மரிய புஷ்பம் அதிர்ச்சியானார். அதனால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார்.
பாளையங்கோட்டை இலந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர் மரியபுஷ்ப ராஜ். 22 வயசாகிறது. ஆட்டோ ஓட்டுகிறார். இவர் அடிக்கடி டிக்-டாக் ஆப்பை பயன்படுத்தி உள்ளார். அப்போதுதான் மதுரையை சேர்ந்த சங்கீதா என்பவர் பழக்கமானார். சங்கீதாவுக்கு 20 வயசு!
மரியபுஷ்பத்துக்கு சங்கீதாவை ரொம்ப பிடித்து போய்விட்டது. அதனால் நேரில் பார்க்க ஆசைப்பட்டார். அதன்படியே சங்கீதாவும் ஆசைப்பட்டார். ஒருத்தரை ஒருத்தர் வெளியில் பார்க்க ஆரம்பித்தனர். அப்படியே ஊர் ஊராக அடிக்கடி ரவுண்டு கட்ட ஆரம்பித்தனர். அப்பறம் என்ன? சங்கீதா கர்ப்பமானார்.

கல்யாணம்
அதனால் சீக்கிரமா தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி சங்கீதா சொல்லி உள்ளார். இதை கேட்ட மரிய புஷ்பம், அவர் வீட்டில் சென்றுபேசி, பெற்றோரை சம்மதிக்கவும் செய்துவிட்டார். பிறகு, சங்கீதா வீட்டுக்கு சொந்தக்காரர்களுடன் பெண் கேட்க சென்றார் மரிய புஷ்பம். அப்போதுதான் அவர் தலையில் அந்த இடிவந்து விழுந்தது.

அதிர்ச்சி
சங்கீதாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாம். ஒரு குழந்தையும் இருக்காம். ஆனா கருத்து வேறுபாடு ஏற்பட்டு புருஷனை பிரிந்து வாழ்கிறாராம். இதைக் கேட்டதுமே மரிய புஷ்பராஜ் அப்செட் ஆனார். சோகமாகவே இருந்தார். இப்படி நம்ம கிட்ட உண்மையை சொல்லாமல் சங்கீதா ஏமாத்திட்டாரே என்ற வேதனை தாங்காமல், வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து விஷத்தை குடித்து விட்டார்.

சிகிச்சை
இதைக் கண்ட அக்கம் பக்கத்தில், உயிருக்கு போராடிய மரிய புஷ்பத்தை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இப்போது அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் சிகிச்சையில் உள்ளார். இந்தவிஷயம் கேள்விப்பட்ட சங்கீதா, காதலனை பார்க்க ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார். சிகிச்சையில் இருந்த மரிய புஷ்பத்தை பார்த்துவிட்டு, மதுரைக்கு பஸ் ஏற நெல்லை பஸ் ஸ்டேண்ட் வந்தார்.

விசாரணை
என்ன நினைச்சாரோ தெரியவில்லை.. அவரும் விஷத்தை குடித்து அங்கேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சங்கீதா, மரிய புஷ்பம்.. ரெண்டு பேருமே இப்போ ஒரே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications