ஒரு க்ளு இல்லை, துப்பு இல்லை, கேமரா இல்லை.. ஆனாலும் அசத்திய போலீஸ்.. உமா மகேஸ்வரி கொலை வழக்கில்!
முன்னாள் மேயர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
Recommended Video
சென்னை: நம்ம போலீசுக்கு முதல்ல ஒரு சபாஷ் போட்டே ஆகணும்.. உமா மகேஸ்வரி கொலையில் முக்கிய குற்றவாளி உட்பட 4 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர் போலீசார்!
கடந்த 23-ம் தேதிதான் உமா மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டு வேலைக்கார பெண் என 3 பேரும் கொல்லப்பட்டனர். நடந்த இந்த கொலையே ரொம்ப பயங்கரமாக இருந்தது. கொலை நடந்த விஷயம் வெளியானதுமே, மாவட்டத்தின் போலீஸ் அதிகாரிகள் உமா மகேஸ்வரி வீட்டுக்கு வந்துவிட்டனர். பொதுமக்கள் பரபரப்பு, தொண்டர்கள் சலசலப்பு-க்கு இடையேதான் போலீசார் விசாரணையை ஆரம்பித்தார்கள்.
முதல் விஷயமே எந்த வெளியாட்களையும் போலீசார் வீட்டுக்குள் அனுமதிக்கவே இல்லை. இதற்கு காரணம் தடயங்களை யாராவது அழித்து விடக்கூடும் என்பதால்தான். ஆனால் கொலையாளிகளே தடயங்களை அழித்துவிட்டு போவார்கள் என்பதுதான் போலீசாருக்கு கிடைத்த முதல் அதிர்ச்சி.

அதிர்ச்சி
உமா மகேஸ்வரி கழுத்தில் நகையை காணோம் என்றதும் இது நகைக்கான கொலை என்றுதான் பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 10 பவுன் நகை, 10 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக போய் 3 பேர் கொலை செய்யப்படுவார்களா என்பது அடுத்த குழப்பம்.

தடயங்கள்
கொலையாளிகள் உமா மகேஸ்வரிக்கு தெரிந்தவர்கள் என்று கருதப்பட்டது. ஏனெனில் ஹாலில் உட்கார்ந்து தண்ணி குடித்திருக்கிறார்கள். அதனால்தான் கடைசிவரை தங்கி சென்று தடயங்களையும் அழித்து விட்டு சென்றிருக்கிறார்கள். திடீரென புகுந்த கொள்ளையன் இப்படி சாவகாசமாக கொலை செய்திருக்க முடியாது என்பது மூன்றாவது குழப்பம்.

போஸ்ட்மார்ட்டம்
உமா மகேஸ்வரி கழுத்தில் 6 இன்ச் அளவுக்கு கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டு இருந்தது. கணவரின் உடம்பெல்லாம் எண்ணவே முடியாத அளவுக்கு கத்தி குத்துகள். அவ்வளவு ஆவேசமாக குத்தி துளைத்திருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு ரூமில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர் என்ற போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் போலீசாருக்கு நான்காவது குழப்பம்.

சிசிடிவி கேமரா
எந்த கொலையாளியுமே ஒரு கொலையை செய்தால், அவனையும் அறியாமல் ஒரு தடயத்தை விட்டு போவது இயல்பு. அப்படி ஒரு க்ளூவும் அந்த வீட்டில் இல்லாததும், வீட்டில் ஆகட்டும், அந்த தெருவில் ஆகட்டும் சிசிடிவி கேமரா இல்லாதது போலீசாருக்கு ஐந்தாவது மைனஸ்!

அரசியல்
30 கோடிக்கு சொத்து இருந்தாலும், 25 கோடி ரூபாய் சொத்து கொஞ்சம் வில்லங்கம் கொண்டது என்பதால், சொத்துக்கான கொலையாக இது பார்க்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தர ஏமாற்றம் அடைந்ததால், அரசியல் ரீதியான கொலையாக இது பார்க்கப்பட்டது. கணவரின் வீட்டு பக்கம் நிறைய பிரச்சனை சொத்து விவகாரத்தில் இருந்து வந்ததால், இது குடும்ப தகராறாகவும் பார்க்கப்பட்டது.

வேலைக்காரி
டெக்னிக்காக கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்தால் வடமாநில ஆட்கள்நகை, பணத்துக்காக செய்திருக்கலாம் என்றும் பார்க்கப்பட்டது. உமா மகேஸ்வரியை சுற்றி என்ன நடந்திருக்கிறது என்றே தெரியாமல் குழம்பியது ஆறாவது மைனஸ்! இப்படி ஒரு துப்பும் இல்லாமல், ஒரு சின்ன க்ளூவும் இல்லாமல் தனது விசாரணையை பல்வேறு சிக்கல்களுக்கிடையே போலீசார் துவக்கியது உண்மையிலேயே மிகப் பெரிய சவால்தான். சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் உள்ள சிசிடிவியை கேமராவை ஆராய்ந்ததால்தான் இந்த விசாரணை தீவிரமானது.

ஓட்டல்
அந்த ஓட்டல் முன்பு நின்றிருந்த ஸ்கார்பியோ கார்தான் முதல் க்ளூ. அடுத்த ஒரு செல்போன் நம்பர் அந்த டவரில் அதிக நேரம் பேசியதாக காணப்பட்டது.இதுதான் இரண்டாவது க்ளூ. தட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிடக்கூட இல்லாமல் 3 பேருமே அவசரஅவசரமாக ஓட்டலை விட்டு கிளம்பியது 3-வது க்ளூ. கொலை நடந்த நேரமும், இவர்கள் ஓட்டலை விட்டு கிளம்பி சென்ற நேரமும் ஒன்றேதான் என்பது 4-வது க்ளூ. ஸ்கார்பியோ கார் ஓனரும், சிக்னல் காட்டிக் கொடுத்த செல்போன் ஓனரும் ஒருவர்தான் என்பது 5-வது க்ளூ.

சபாஷ்
இப்படிதான் கொலையாளி சிக்கி உள்ளான். எந்த தடயமும் கிடைக்காத பட்சத்தில், மிகக்குறுகிய காலத்தில் கொலையாளியை போலீசார் ரவுண்டு கட்டி பிடித்து விட்டார்கள். இந்த விஷயத்தில் நம்ம போலீசாரை மனசார பாராட்டாமல் இருக்கவே முடியாது. தமிழ்நாடு போலீஸ் தமிழ்நாடு போலீஸ்தான்!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications