ஏர்வாடியை உலுக்கிய பிரமாண்ட பேரணி.. என்ஆர்சி, சிஏஏவுக்கு எதிராக.. நகரே குலுங்கியது!
ஏர்வாடி: நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் நேற்று நடந்த பிரமாண்ட பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தால் நகரமே குலுங்கிப் போனது.
தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு பெரு நகரிலும், 2ம் நிலை நகரங்கள், சிற்றூர்களிலும் பெரும் திரளான மக்கள் கூடி போராட்டங்களைத் தொடர்ந்து வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பிரிவினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வர்த்தக அமைப்புகள், பல்வேறு சங்கங்கள், அரசியல் கட்சியினர் இந்தப் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நேற்று நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடைபெற்றது. அனைத்து ஜமாத் கூட்டமைப்பு, வர்த்தக சங்கங்கள், கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன.

இந்தப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 20,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நகர் முழுவதும் நேற்று கடையடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் மாலை 4 மணி வாக்கில் நடந்த பிரமாண்ட பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
படங்கள், வீடியோ: காதர் மஸ்தான்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications