கன்னியாகுமரியில் மோடியை கண்டித்து வைகோ போராட்டம்... பாஜகவினர் கல்வீச்சு... திடீர் பதற்றம்
Recommended Video

கன்னியாகுமரி:கன்னியாகுமரியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடிக்கு எதிராக வைகோ கருப்புக்கொடி போராட்டத்தில் இறங்கினர். அப்போது பாஜகவினர் கற்களை வீசியதால் குமரி மாவட்டம் டென்ஷனில் இருக்கிறது.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று கன்னியா குமரி வருகிறார். அவரின் வருகையை முன்னிட்டு.... பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவில் லோக்சபா தேர்தல் தொடர்பாக மோடி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை அடுத்து டிவிட்டரில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் மீண்டும் வைரலாகி வருகிறது.
[Read more: திரும்ப திரும்ப பேசுற நீ... மீண்டும் வைரலாகும் கோ பேக் மோடி.. தேசிய அளவில் நம்பர் 1!]

ஹேஷ் டேக் முதலிடம்
மோடியின் வருகைக்கு எதிராக தமிழர்கள் இதில் தொடர்ந்து டிவிட் செய்து வருகிறார்கள். அதனால் இந்த ஹேஷ் டேக் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

வைகோ போராட்டம்
அவரது வருகையை கண்டித்து... கருப்புக்கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். அதன்படி.... அவர் தொண்டர்களுடன் நெல்லை, கன்னியாகுமரி எல்லையான காவல் கிணறு பகுதியில் திரண்டார். காவல் கிணறறு பகுதியில் அவர் பிரதமர் மோடியை கண்டித்து போராட்டத்தில் இறங்கினார்.

ஆவேச முழக்கம்
தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றிய வைகோ... மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு செய்த துரோகங்கள் எவை என்று அவர் பட்டியலிட்டு ஆவேசமாக பேசினார். அப்போது மோடியே திரும்பி போ என்று மதிமுகவினர் முழக்கமிட்டனர்.

அனுமதிக்க மறுப்பு
கருப்புக் கொடி போராட்டம் காரணமாக... கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் வைகோவை அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர். பாதுகாப்பு பணிக்கான ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கற்கள் வீச்சு
கருப்புக்கொடி போராட்டத்தின் போது... மதிமுகவினர் மீது பாஜகவினர் திடீரென கற்களை வீசியதால் பதற்றம் நிலவியது. ஒருபுறம்... வைகோ தலைமையில் மதிமுகவினர்... மற்றொரு புறம் பாஜகவினர் திரண்டனர்.

தாக்குதல்
கைகளில் கருப்புக்கொடிகளுடன் நின்றிருந்த மதிமுகவினர் மீது...பாஜகவினர் கற்களை வீசினர். வைகோவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். அதை கண்டித்த மதிமுகவினர் கற்களை வீசிய பாஜகவினரை அவர்கள் தாக்கினர்.

தொண்டர்கள், வைகோ கைது
இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து.... மதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவும் கைது செய்யப்பட்டார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications