"நெல்லையில் மோடியின் வடை கடை.." கொதிக்கும் கடாயில் சுடச்சுட வடை போட்டு.. நூதன பிரசாரம் செய்த திமுக
நெல்லை: மோடி அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாயிலே வடை சுடுவதாக திமுகவினர் கூறி வரும் நிலையில், நெல்லையில், மோடி வடை கடை என்ற பெயரில் அசல் கடையை போன்று செட் அப் ஏற்படுத்தி சுடச்சுட வடையை எண்ணையில் பொறித்து மக்களுக்கு விநியோகம் செய்து நூதன பிரசாரம் செய்தனர்.
லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுக்கூட்டங்கள், பிரச்சார விளம்பரங்களில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுகவின் நூதன பிரச்சாரம் கவனம் ஈர்த்து வருகிறது.

அதாவது, மத்தியில் ஆட்சி செய்யும் மோடி, தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை எதுவுமே நிறைவேற்றாமல் வாயிலே வடை சுடுவதாக குற்றம் சாட்டி வரும் திமுகவினர்.. மக்களை கவரும் விதமாக நூதன பிரசாரத்தையும் கையில் எடுத்துள்ளனர்.
மோடி வடை கடை: பொதுமக்களுக்கு மோடி அரசு அல்வா கொடுத்து விட்டதாக அல்வா பாக்கெட்டுகள் விநியோகம் செய்வது.. மோடியின் வடைகள் என நிறவேற்றாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி, சுடச்சுட மக்களுக்கு விநியோகம் செய்வது.. என விதவிதமான பிரசாரத்தில் திமுகவினர் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், நெல்லையில் திமுகவினர் நூதன பிரசாரம் மேற்கொண்டனர்.
ஒருபக்கம் மோடி அரசு எதுவும் செய்யவில்லை என்று திமுகவினர் பிரசாரம் செய்து வந்த நிலையில், அதன் அருகிலேயே மோடியின் வடை கடை என்ற பெயரில் அசல் கடையை போன்று செட் அப் ஏற்படுத்தி சுடச்சுட வடையை எண்ணையில் பொறித்து மக்களுக்கு விநியோகம் செய்து வந்தனர். அங்கேயே கேஸ் அடுப்புகளை வைத்து மாவு தட்டி வடை சுடும் பணியும் நடைபெற்றது. திமுகவினர் மேற்கொண்ட இந்த நூதன பிரச்சாரம் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெறுவதாக இருந்தது.
எதுவும் நிறைவேற்றவில்லை: முன்னதாக, கோவை, திருப்பூரிலும் இதேபோன்று நூதன பிரச்சாரத்தை மேற்கொண்டனர். நேற்று முன் தினம் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் திமுகவினர் பொதுமக்களுக்கு வடை சுட்டு வழங்கியதுடன், பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாகவும், அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை எனக் கூறியும் பிரசாரம் செய்தனர். மோடி சுட்ட வடைகள் என சில திட்டங்களை துண்டு சீட்டில் பட்டியலிட்டு அதில் வடையை வைத்து பொதுமக்களுக்கு வழங்கி வினோத முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மேலும் சாலையோரத்தில் திமுகவினரால் வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் பேனரில் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட நதிகள் இணைப்பு உள்ளிட்ட 15 திட்டங்களை பட்டியலிட்டு, அந்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை, வெறும் வாயால் வடை சுட்டு வருகிறார் பிரதமர் மோடி என விமர்சனம் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications