கிராம சபையில உட்கார்ந்து, டீ குடிச்சு, ஜீன்ஸ் போட்டு.. ஜிம்முக்கு போய்..ஸ்டாலின் மீது பாய்ந்த சீமான்

திருநெல்லி பொதுக்கூட்டத்தில் முக ஸ்டாலினை சீமான் கடுமையாக சாடினார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: "ஒன்னுத்துக்கே உதவாத ஒரு அற்ப மாநில பதவிக்காக எதுக்கு குடும்பம் குடும்பமா உழைக்கறீங்க? ஓட்டுக்கு காசு கொடுத்து, கிராம சபையில உட்கார்ந்து, டீ குடிச்சு, கரும்பு வயலுக்குள்ள நுழைஞ்சு, வாழைத் தோப்புக்குள்ள போயி, கும்புட்டு, ஷார்ட், ஜீன்ஸ் போட்டு நடந்து, ஜிம்முக்கு போய்.. எப்படியாவது பதவிக்கு வரணும்னு ஏன் நினைக்கறீங்க? கோடி கோடியா கொள்ளையடிக்க.. கொழுத்து பெருக்கி வாழ!" என்று சீமான் முக ஸ்டாலினை சரமாரியாக சாடியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி எதிர்பாராத அளவில் வாக்குகளை பெற்றிருந்தது. மாநில அளவில் 4-வது கட்சி என்ற பெருமையையும் எட்டி பிடித்தது.

இந்நிலையில், தமிழ் தேசிய பார்வை என்ற பெயரில் நெல்லையில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசும்போது, திமுக உட்பட மத்திய, மாநில அரசுகளை வறுத்தெடுத்தார். அப்போது அவர் சொன்னதாவது:

சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

"நாங்கள் தமிழர்கள், எங்களை நாட்டை ஆள விடுங்கள் என்று சொல்வதை பெருந்தகைகள் ரொம்பவும் விமர்சிக்கிறார்கள். திமுக உண்மையிலேயே தமிழர்களுக்கான கட்சியா? ஆனால் ஆந்திர தேசத்தில் இருந்து இங்க வந்த ஐயா சந்திரபாபுநாயுடு, பத்திரிகையாளர் சந்திப்பில் என்ன சொன்னார்?

தமிழர்கள்தானே?

தமிழர்கள்தானே?

"தமிழ்நாட்டில் வாழுற தெலுங்கர்கள் எல்லாம் திமுகவுக்கு வாக்கு செலுத்துங்கள்" என்று சொன்னாரே.. அதையெல்லாம் நீங்க எப்படி எடுத்துக்கிட்டீங்க? ஏன் அதை பத்தி யாரும் பேசல? "இங்க யாரு தெலுங்கர் இருக்கா, எல்லாரும் தமிழர்கள்தானே"ன்னு ஏன் யாருமே கேள்வி கேக்கல? ஒருத்தனும் ஒரு கேள்வியும் கேக்கல.

முழிக்கிறாங்க

முழிக்கிறாங்க

எங்க போறதுன்னு தெரியாம முட்டு சந்தில் முட்டிக்கிட்டு முழிக்கிற ஆளு நம்ம ஆளுங்க இல்லை. ஆனால் மற்றவர்கள் ஒரு குறுகிய இலக்கை குறித்து விட்டு பயணிக்கிறார்கள். இப்போ பல பேருக்கு அடுத்த தேர்தலில் என்ன செய்யறதுன்னே தெரிலயே. அதான் நிலைமை.

அவங்கவங்க விருப்பம்

அவங்கவங்க விருப்பம்

ஆனா நமக்கு எல்லாமே தெரியுது. அடுத்த தேர்தலை பத்திகூட எங்களால சொல்ல முடியும். உள்ளாட்சியா, எல்லா இடத்துலயும் 50-க்கு50 பெண்கள் போட்டி போடறோம்! பிச்சை கேட்போம்.. வயித்துக்கு பிச்சை கேட்கல.. என் இன மக்கள் வாழ்க்கைக்கு பிச்சை கேட்போம். அதை போடறதும், போடாததும் அவங்கவங்க விருப்பம். ஆனா அந்த பிச்சையை 50, 60 ஆண்டு கால குப்பையிலேயே கொண்டு போய்தான் கொட்டுவோம்னா அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது.

வெள்ளையா இருந்தாதானா?

வெள்ளையா இருந்தாதானா?

நான் 8 வருஷமா கத்திட்டு இருக்கேன்.. என் இனம் பட்ட வேதனையை சொன்னேன்.. மொழியின் பெருமையை சொன்னேன்.. பன்னெடுங் காலமாக பட்ட துயரங்களை மக்களிடம் சொன்னேன்.. ஆனா அதெல்லாம் எங்களுக்கு அவசியம் இல்லை, "பிக் பாஸ்"ன்னு ஒரு நிகழ்ச்சி நடத்தினா போதும்னா அதுக்கும் நாம ஒன்னும் பண்ண முடியாது. தோல் வெள்ளையா இருந்தாதான் போட்டியிடணும்னா, நான் என்ன தீக்குளிச்சிட்டு எந்திரிச்சா வர முடியும்? இதெல்லாம் கஷ்டம்.

தீர்மானம் போடலையே?

தீர்மானம் போடலையே?

'என் இனத்தை கொல்வதற்கு ஆயுதம் நீங்கள் கொடுத்தால், என் இன மக்களை பணமும், ஆயுதமும் கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலைமை உருவாகி விடும்'னு ஒரு தீர்மானத்தை சட்டசபையில் இந்நேரம் போட்டிருந்தாலே போதுமே.. அவங்கள திணறடிச்சி இருக்கலாமே!

கொழுத்து பெருக்கி வாழ!

கொழுத்து பெருக்கி வாழ!

ஆனால், "ஒரு மாநில பதவியை வெச்சிக்கிட்டு நான் என்ன செய்ய முடியும்" னு இவர் சொல்றாரு. அப்படின்னா, ஒன்னுத்துக்கும் உதவாத ஒரு அற்ப மாநில பதவிக்காக எதுக்கு குடும்பம் குடும்பமா உழைக்கறீங்க? ஓட்டுக்கு காசு கொடுத்து, கிராம சபையில உட்கார்ந்து, டீ குடிச்சு, கரும்பு வயலுக்குள்ள நுழைஞ்சு, வாழைத் தோப்புக்குள்ள போயி, கும்புட்டு, ஷார்ட், ஜீன்ஸ் போட்டு நடந்து, ஜிம்முக்கு போய்.. எப்படியாவது பதவிக்கு வரணும்னு ஏன் நினைக்கறீங்க? கோடி கோடியா கொள்ளையடிக்க.. கொழுத்து பெருக்கி வாழ!" என்று சரமாரியாக வெளுத்து வாங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+