நெல்லை தொகுதியில் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும்.. ராக்கெட் ராஜா வெளியிட்ட வீடியோ
நெல்லை: திருநெல்வேலி தொகுதிக்கான லோக்சபா தேர்தலில் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா பரபரப்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நெல்லை லோக்சபா தேர்தல் தொடர்பாக பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா பரபரப்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பனங்காட்டுப்படை கட்சி போட்டியிட்ட நிலையில் லோக்சபா தேர்தலில் களமிறங்கவில்லை. வரும் லோக்சபா தேர்தலில் நெல்லை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் போட்டியிடுகிறார்.
அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் சார்பில் சத்யா போட்டியிடுகின்றனர். மேலும் சுயேச்சைகளாக ஏராளமானவர்கள் போட்டியிடுகன்றனர். இந்நிலையில் தான் ராக்கெட் ராஜா வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
வணக்கம் என் நாடார் உறவுகளுக்கு.. அவசர காலம் கருதி என் உறவுகளுக்கு இந்த வீடியோவை வழங்குகிறேன். சுருக்கமாக சொன்னால் இந்த தேர்தலில் குறிப்பாக திருநெல்வேலி நாடார் தொகுதியை நாம் தக்க வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நாடார் சொந்தங்களே திருநெல்வேலி என்பது நாடார் தொகுதி என்று தான் பயணித்து வருகிறது. இந்த தொகுதியில் வெற்றி பெற்றாலும் நாடார், தோல்வியடைந்தாலும் நாடார் என்ற சூழ்நிலையை மாற்றும் வகையில் அதிக விழுக்காடாக உள்ள நாடார் சமுதாயத்தை மொத்தமாக புறம்தள்ளி, நாடார் எதற்கு லாயக்கற்றவர்கள், எதை சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்று ஒரு கற்பனை மாயாஜாலத்தோடு நாடார் தொகுதியை மாற்றார்கள் அபகரிக்கும் சூழல்உருவாகி உள்ளது.
நேற்று வரை பெரியதாக உன்னிப்பாக நான் யோசிக்கவில்லை. ஆனால் 2 நாட்களுக்கு முன்பு நடந்த சம்வம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அது எல்லோருக்கும் தெரியும். 80, 90 காலத்தில் திருநெல்வேலி எப்படி இருந்தது. நாடார்கள் சுதந்திரமாக நடமாடவும், வணிகம், வர்க்கம் செய்யவும் பாதுகாப்பாக அரணாக இருந்தவர் கராத்தே செல்வின் நாடார். ஆனால் இதனை கொச்சைப்படுத்தும் வகையில் அன்று அவரது தலைக்கே விலை பேசியது போல அவரது ஆன்மாவுக்கும் இன்று விலைபேசி முடித்து விட்டாச்சி.
காரணம் அவரது குடும்பம் வரை பணத்தை செலவழித்து நாடார்களை கொச்சைப்படுத்துவது போலவும், நாடார்கள் குறைந்தது போலவும், பணஅரசியல் மூலமும், அராஜக போக்கிலும் நாடார்களை வீழ்த்தும் சூழலை உருவாக்கி உள்ளனர். நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன். திருநெல்வேலி நாடார் தொகுதி என்பது பலாக்காய் விளைகிற பலாக்காடு அல்ல. அங்கு பனம்பூ வாசம் தான் வீச வேண்டுமே தவிர புதிதாக வந்திருக்கிற எந்த கட்சியும் முளைக்க முடியாது. முளைத்தாலும் அது புடுங்கி வீசப்படும்.
உறவுகளே இதை எதற்கு சொல்கிறேன் என்னறால் நேர்மையான அரசியலோடு பயணித்தால் பிரச்சனையில்லை. அதிக விழுக்காட்டில் நாடார்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தும் அரசியல் கட்சிகளும் சும்மா நாடார்கள் பலவீனப்பட்டு விட்டார்கள் என்று கற்பனை செய்து யாருக்கெல்லாம் சீட்டை கொடுத்துள்ளனர் என்று பாருங்கள். நாடார்களை கொச்சைப்படுத்தும் சூழலையே ஏற்படுத்தி உள்ளனர்.
இதனை நாடார்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். சிலர் எப்படி வேண்டுமானாலும் போகட்டும். ஆனால் நாடார்களே மத பிரச்சனைக்குள் போகாதீர்கள். நம் ஒட்டுமொத்த இனமும் எந்த மதத்தின் பின்னாலும் கிடையாது. இந்த நேரத்தில் இந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என்ற வேறுபாடு கூடாது. நாடாரை நேசிக்கிறவர் மதஅரசியலில் பயணிக்க மாட்டார். இப்போது முழுக்க முழுக்க அரசியல் வியாபாரமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக நாடார் கட்சியான பனங்காட்டு படை இந்த தேர்தலில் இறங்கவில்லை.
ஆனால் நாடார் உறவான ஒரு கட்சியின் தலைவர் கூட நாடார் தொகுதியில் கருப்பட்டி கொண்டு வியாபாரம் செய்ய வரவில்லை. பால் வியபாாரம் தான் செய்கிறார். இங்கு பனம்பால் மணம் தான் வீச வேண்டும். பிற மணத்துக்கு இடமில்லை. நமது உறவுகள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் கூற இங்கு வரவில்லை. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள்.
உங்களின் ஓட்டு நாடாருக்கு செல்ல வேண்டும். நாடார் ஓட்டு நாடாருக்காக என்று இருக்க வேண்டும். தொகுதியில் ஒரு நாடார், நாடாத்தி நிற்கிறார். இவர்கள் இருவரை தவிர உங்கள் விரல் இந்த சமுதாயத்துக்கு துரோகம் இழைக்கும் வகையில் மாற்று சமுதாயத்தை நோக்கி சென்றால் நாம் திருநெல்வேலியில் இறந்த பிணத்துக்கு சமமாக தான் பார்ப்பார்கள். அதோடு அப்படி செய்வதால் காமராஜர், கராத்தே செல்வின் ஆகியோரின் ஆன்மா நம்மை ஒருபோதும் நம்மை மன்னிக்காது'' என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications