விவி மினரல்ஸ் ரூ.2,195 கோடி செலுத்த நெல்லை ஆட்சியர் உத்தரவு! 6 நிறுவனங்களுக்கு பறந்தது நோட்டீஸ்!
நெல்லை: சட்ட விரோதமாக தாது மணல் உள்ளிட்ட கனிமங்களை எடுத்த 6 நிறுவனங்கள் அரசுக்கு ரூ.3,528 கோடி செலுத்த வேண்டும் என நெல்லை ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விவி மினரல்ஸ் நிறுவனம் ரூபாய் 2,195 கோடி செலுத்த நெல்லை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தாது மணல் எடுக்கும் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மட்டும் அரசுக்கு ராயல்டி மற்றும் கனிமவள கட்டணமாக ரூ.2,195 கோடி செலுத்த வேண்டும் நெல்லை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். டிசம்பர் 16 ஆம் தேதியிட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விவி மினரல்ஸ் நிறுவனம் மட்டும் 2002 ஆம் ஆண்டு முதல் 2014 வரை நெல்லை மாவட்டத்தில் 2 லட்சம் டன் கனிமங்களை சட்டவிரோதமாக எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை கலெக்டர் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தாது மணல் அள்ளுவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக அப்போதைய செயலாளர் ககந்தீப் சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுக்கள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொண்டன.
இந்த ஆய்வில், பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானது. 2015 ஆம் ஆண்டு இது தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட தாது மணல் ஆலைகள் மூடப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் ரூ.5,832 கோடியை வசூலிக்க உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தான், நெல்லை மாவட்டத்தில் உள்ள 6 கனிமவள நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக தாதுமணல் அள்ளியதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சட்ட விரோதமாக தாது மணல் உள்ளிட்ட கனிமங்களை எடுத்த கார்னெட், இல்மனைட், விவி மினரல்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் அரசுக்கு ரூ.3,528 கோடி செலுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications