திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெல்லை கல்குவாரி விபத்து! 5வது நபரை மீட்கும் பணி தீவிரம்! நிச்சயம் மீட்போம் - நெல்லை ஆட்சியர் உறுதி

Google Oneindia Tamil News

நெல்லை : நெல்லை கல் குவாரி விபத்தில் 5வது நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை மீட்பதற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொண்டுவரப்பட இரும்பு ரோப் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் கல்குவாரி விபத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று மூன்றாவது நாளக நடந்து வருகிறது. இதில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டுபேர் உயிரிழந்துள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள லாரி ஓட்டுனர்கள் ராஜேந்திரன், செல்வகுமார் ஆகியோரை மீட்கும் பணியானது தொடர்ந்து 55 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.

வன்னியர் மக்களை இழிபடுத்தியதாக புகார்..! 'ஜெய்பீம்’ இயக்குநர், நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு..! வன்னியர் மக்களை இழிபடுத்தியதாக புகார்..! 'ஜெய்பீம்’ இயக்குநர், நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு..!

மாவட்ட ஆட்சியர் பேட்டி

மாவட்ட ஆட்சியர் பேட்டி

இதில் 5வது நபரின் உடல் கிடப்பது கண்டறியப்பட்டு மீட்புபணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மாலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மீட்பு பணிகளை பார்வையிட்டார் . இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," குவாரி விபத்து தொடர்பாக இன்று மூன்றாவது நாளாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டு லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

கூடுதல் மீட்பு கருவிகள்

கூடுதல் மீட்பு கருவிகள்

3- வது நபர் உயிருடன் மீட்கபட்ட போதும் மருத்துவமையில் உயிரிழந்தார், 4வது நபர் சடலமாக மீட்கப்பட்டார், 5வது நபர் இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டு அவரது உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது . நிலச்சரிவு தொடர்ந்து ஏற்படுவதாலும், பெரிய பாறைகள் இருப்பதாலும் கூடுதலாக மீட்பு கருவிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வல்லுநர்களுடன் ஆலோசனை

வல்லுநர்களுடன் ஆலோசனை

குறிப்பாக தூத்துக்குடி துறை முகத்தில் இருந்து 100 மீட்டர் நீளமுள்ள இரும்பு ரோப் கொண்டுவரப்பட்டு அதன்மூலம் பறைகளை அப்புறப்படுத்தி உடலை மீட்க முயற்சிகள் நடக்கிறது . உடல் மீட்கப்பட்ட பின்புதான் அவர் யார் என அடையாளம் காணமுடியும், தொடர்ந்து மீட்பு பணி குறித்து சரங்கத்துறை நிபுணர்கள், தொழிற்சாலை வல்லுனர்கள், ஆகியோருடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

அடிக்கடி நிலச்சரிவு

அடிக்கடி நிலச்சரிவு

அவர்கள் அளிக்கும் ஆலோசனைப்படி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நாம் எதிர்கொள்ளும் சவால்கள் பாறைகள் சரியாமல் இருக்க வேண்டும், இரவில் மழை பெய்யாமல் இருக்க வேண்டும். தொடர் நிலச்சரிவு இருக்க கூடாது, இதனை எதிர்கொண்டு பணிகள் மேற்கொள்ள வல்லூனர்களுடன் ஆலோசனை செய்து வருகிறோம். தற்போது நமது முழு கவனமும் 5வது நபரை மீட்பதில் தான் உள்ளது" என தெரிவித்தார்.

English summary
District Collector Vishnu said that efforts are being made to bring the 5th person found in the Nellai stone quarry accident by an iron rope to bring him back from the port of Thoothukudi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X