Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா.. அடுத்தடுத்து திமுக மேயர்கள் பதவி விலகலால் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கோவை திமுக மேயர் ராஜினாமா செய்த சில நிமிடங்களில் திருநெல்வேலி திமுக மேயரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளார். இந்நிலையில், கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

nellai mayor dmk politics

இதனால் நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு வந்தது. நெல்லை மாநகராட்சி மேயரை மாற்றக்கோரி கவுன்சிலர்கள் பலர் அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து முறையிட்டனர். மேயரை மாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினர்.

கடந்த ஜனவரி மாதம், நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரேவிடம் மேயர் சரவணனுக்கு எதிராக 38 திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வர நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டம் ஆரம்பமான நிலையில் ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை. இதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. அமைச்சர் பேச்சுவார்த்தையால் அப்போதைக்கு சமாதானமடைந்தாலும் அதிருப்தி தொடர்ந்து வந்ததாகவே கூறப்பட்டது.

இந்நிலையில் திருநெல்வேலி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே போர்க்கொடி தூக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது, ராஜினாமா செய்துள்ளார் சரவணனன்.

மேயர் சவரணன் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவுக்கு அனுப்பி உள்ளார். தனது சொந்த காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து விலகுவதாக நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை, கோவை திமுக மேயர்கள் மீது தலைமைக்கு வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தினார். அமைச்சர் கொடுத்த ரிப்போர்ட்டை தொடர்ந்து கட்சி் தலைமை அறிவுறுத்தலின்படி இருவரும் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கோவை, நெல்லை மாநகராட்சி மேயர்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+