13 வருடங்களுக்கு பின் நெல்லையில் ஆச்சரியம்.. நீதிபதியே நேரில் பார்த்துட்டாரு! முருகனுக்கு இது தேவையா
நெல்லை: தமிழக வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் சமீப காலமாகவே லஞ்சம் வாங்குவோர்கள் பெருகி கொண்டிருக்கிறார்கள். இதனால் அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கையும் களவுமாக பொதுவெளியில் கைதாகி வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்களக்கு உரிய தண்டனைகளையும் நீதிமன்றம் தந்து வருகின்றன.. தீர்ப்புகள் சற்று தாமதமானாலும்கூட, நீதிமன்றம் தன்னுடைய கடமையை சரியாக செய்கின்றன என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்தான் இந்த சம்பவம்.
கடந்த மாதம் ராமநாதபுரத்தில் ஒரு தீர்ப்பு தரப்பட்டது.. சூரன்கோட்டையை சேர்ந்த விஸ்வநாதன், என்பவர், தன்னுடைய தாய் காமாட்சி பெயரிலுள்ள பட்டாவில், ஒரேயொரு புள்ளியை மட்டும் திருத்தம் செய்ய, ராமநாதபுரம் தாலுகா ஆபீசுக்கு சென்றுள்ளார்.

நீதிமன்றங்கள் தரும் நம்பிக்கை
இளநிலை உதவியாளரான முகமது திலீப் 47, என்பவர் .1000 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து தந்த புகாரில் கடந்த 2015-ல் முகமதுதிலீப் கைதானார்.
இதுதொடர்பான வழக்கு, ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், முகமது திலீப்புக்கு 4 வருட சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மோகன்ராம் தீர்ப்பளித்தார்.. முகமது திலீப் இப்போது ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலைபார்த்து வந்தும்கூட, வெறும் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டு, அரசு வேலையையும் இழந்து, இப்போது 4 வருடம் சிறைக்கு சென்றுள்ளார்.
வயதான தம்பதிக்கு தண்டனை
அதேபோல, சமீபத்தில்கூட நெல்லை நீதிமன்றத்தில் லஞ்ச வழக்கு ஒன்றில் தீர்ப்பு தரப்பட்டது.. சாத்தூர் NGO காலனியை சேர்ந்தவர் ஜெயபாலன் (74) , இவரது கோமதி..
கடந்த 2005-06 ஆண்டுகளில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்ட துணை வணிக வரி அலுவலராக ஜெயபாலன் பணியாற்றினார்.. அப்போது ஒரு தனியார் நிறுவனத்தின் வணிக வரி மதிப்பை திருத்துவது தொடர்பாக ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார். இதுதொடர்பாக புகார் தரவும் ஜெயபாலன் கைதானார். அவரது விருதுநகர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மனைவியின்
பெயரில் ஜெயபாலன் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது தெரிய வந்தது. உடனே மனைவி மீது 2 வழக்குகள் பதிவாகின..
இந்த வழக்கு 20 வருடங்களாக நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்புதான் தீர்ப்பு தரப்பட்டது. அதில் 74 வயதான ஜெயபாலனுக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயபாலன் மற்றும் அவரது மனைவி கோமதிக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அதாவது, 20 வருடம் கழித்து தற்போது தண்டனையை அனுபவிக்க சென்றுள்ளனர் இந்த வயதான தம்பதியினர்.
நீதிபதியே பார்த்துவிட்டார்
இதோ இப்போது இதே திருநெல்வேலி கோர்ட்டில் மற்றொரு லஞ்ச வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. என்ன நடந்தது தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன்.. இவருக்கு தற்போது 51 வயதாகிறது.. 2012 ஜூனில் வழக்கில் ஒன்றில் நாங்குநேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிமன்ற எழுத்தர் மாரியப்பனிடம் 20 ரூபாய் தந்து ஒரு நகலை பெற்றார். எழுத்தருக்கு 20 ரூபாய் தந்ததை இதை நீதிபதி சுந்தரராஜ் பார்த்துவிட்டார்.
20 ரூபாய் லஞ்சம்
முருகன் லஞ்சமாக கொடுத்த இரண்டு, 10 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யும்படி போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசாரும் முருகன், மாரியப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 2019ல் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றப்பட்டதுடன், லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையும் நடந்துவந்தது.. ஆனால், விசாரணையின்போதே கடந்த 2023ல் மாரியப்பன் இறந்துவிட்டார்.
13 வருடங்களுக்கு பிறகு விடுவிப்பு
இதனால் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி, நீதிமன்றத்தில் முருகன் மனு செய்தார்... இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, "குற்றப்பத்திரிகையில், குற்றவாளி குற்ற நோக்கத்துடன் 20 ரூபாய் வழங்கியதாக எந்த ஆதாரமும் இல்லை. அவர் சட்டப்படி நகல் பெறுவதற்கான கட்டணமாக, 20 ரூபாயை தந்திருக்கலாம்.. எனவே, முருகன் மீது குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்ல என்பதால் முருகனை விடுவித்து உத்தரவிடப்படுகிறது" என்று தீர்ப்பளித்தார்.
20 ரூபாய் லஞ்சம் தந்த வழக்கில் 13 வருடங்களுக்கு பிறகு முருகனை நீதிமன்றம் விடுவித்திருக்கிறது.. இந்த வழக்கும், அதன் தீர்ப்பும் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications