Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேயரானாலும் பழக்கத்தை விடல.. சைக்கிளில் வந்து பதவியேற்ற ராமகிருஷ்ணன்! தாயார் கையால் அங்கியை பெற்றார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சி மேயராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் இன்று சைக்கிளில் வந்து பதவி ஏற்றுக் கொண்டார். தனது 95 வயதான தாய் மரகதம்மாள் கையால் மேயர் அங்கியை பெற்று அணிந்து கொண்டார் ராமகிருஷ்ணன். பின்னர் ஆணையர் சுகபுத்ரா மேயர் ராமகிருஷ்ணனுக்கு செங்கோலை வழங்கினார்.

நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில் திமுக சார்பில் 44 பேரும், திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் 7 பேரும் அதிமுக சார்பில் 4 பேரும் மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில், சொந்தக் கட்சியின் கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கியதால் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் கடந்த ஜூலை 3 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய மேயர் தேர்தல் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது.

Nellai mayor ramakrishnan took charge today by came in bicycle from home

இதில் திமுக தலைமையால் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து, திமுகவிலிருந்து நீக்கப்பட்ட 6-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜும் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் அங்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது.

கிட்டு என்ற ராமகிருஷ்ணன் 30 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகளும் பெற்றனர். ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நெல்லை மாநகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சுக புத்ரா, மேயர் தேர்தலில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவித்து அதற்கான சான்றிதழையும் வழங்கினார்.

Nellai mayor ramakrishnan took charge today by came in bicycle from home

இதனைத் தொடர்ந்து இன்று நெல்லை மாநகராட்சி வளாகத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் கோ.ராமகிருஷ்ணன் நெல்லை மாநகராட்சியின் ஏழாவது மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுக புத்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் மேயருக்கான அங்கியையும், செங்கோலையும் மேயரின் தாயார் மரகதம்மாளுடன் இணைந்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுக புத்திரா வழங்கினார்.

இந்த பதவியேற்பு விழாவில் நெலொலை மாமன்ற உறுப்பினர்கள், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், மாநகராட்சி உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் இன்று காலையில் தனது வீட்டில் இருந்து வழக்கமாக வரும் சைக்கிளில் புறப்பட்டு, நெல்லை டவுனில் உள்ள விநாயகர் கோயில் மற்றும் நெல்லையப்பர் கோயிலில் சாமி கும்பிட்டு வழிபட்டார். அதன் பிறகு, நெல்லையப்பர் கோயிலில் உள்ள காந்திமதி யானைக்கு பழங்கள் வழங்கிவிட்டு சைக்கிளிலேயே மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

சைக்கிளில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த ராமகிருஷ்ணனுக்கு திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மாலை, பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயராகப் பதவியேற்றுக் கொண்ட ராமகிருஷ்ணன் தனது தாயார் மரகதம்மாளுடன் சேர்ந்து, நெல்லை மாநகராட்சி ஆணையர் சுகபுத்ராவிடம் இருந்து செங்கோலை பெற்றுக் கொண்டார்.

நெல்லை மாநகராட்சி மேயராக பதவியேற்க வரும்போது தனது பழைய சைக்கிளில் வந்தாலும், மேயருக்கான கார், மாநகராட்சி அலுவலகத்தில் மாலை அணிவிக்கப்பட்டு தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+