கார் ஷெட்டில் இருந்து அபயகுரல்.. நடுங்கி போன மக்கள்.. கடைசியில் பார்த்தால்... சபாஷ் நெல்லை போலீஸ்
நெல்லையில் ஒரு நாயை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்
நெல்லை: ஒரு கார் ஷெட்டில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டதுமே அந்த பகுதி மக்கள் வெலவெலத்து போய்விட்டனர்.
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு கார்களை நிறுத்துவதற்கு ஒரு ஷெர் தனியாக உள்ளது.. அந்த ஷெட்டில் இருந்து திடீரென ஒரு சத்தம் கேட்டது.

அது நாய் ஊளையிடுவது போலவே இருந்தது.. அதேசமயம், அபயக்குரல் போலவும் இருந்தது.. பகல் நேரத்தில் ஷெட்டில் இருந்து இப்படி ஒரு சத்தம் கேட்டதும், அந்த பகுதி மக்கள் பயந்துவிட்டனர்.. காரணம், அந்த ஷெட் பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து, பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணனுக்கும் தகவல் அளித்தனர்.. இதையடுத்து, அவர்கள் அனுமதியுடன் போலீசார் அங்கு விரைந்து வந்து கார் ஷெட்டின் பூட்டை உடைத்து திறந்தனர்.. அப்போது ஒரு நாய் உள்ளே இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர்.. பிறகு அதை பத்திரமாக மீட்கவும் செய்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை லீவு என்பதால், கதவு பூட்டப்பட்டுள்ளது.. ஆனால் உள்ளே நாய் இருப்பது தெரியாமல் பூட்டிவிடவும், ராத்திரி முழுக்க கத்தி உள்ளது.. ஆனால், இன்று காலையில்தான் நாய் குரைக்கும் சத்தம் அங்கிருந்தோருக்கு கேட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் அந்த ஷட்டருக்கு வேறு ஒரு பூட்டு போட்டனர். நாய் மீட்கப்பட்டதை அடுத்து அந்த பகுதி மக்களும் நிம்மதி அடைந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications