Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆக்‌ஷன்" ஆரம்பம்.. "பற்களை" இடுக்கியால் பிடுங்கி.. அலறிய நபர்கள்.. ஏஎஸ்பி-க்கு பறந்து வந்த "ஆர்டர்"

Subscribe to Oneindia Tamil

நெல்லை: விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டுள்ளதாக, நெல்லையில் பகீர் புகார் கிளம்பி உள்ளது.. இதுகுறித்து விசாரிக்க, மாவட்ட கலெக்டர் விசாரிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பலவீர்சிங் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்..

இந்த உலகில், ஒருவரை அடிக்கும் உரிமை யாருக்குமே கிடையாது.. போலீசார் மட்டுமல்ல வேற எந்த ஒரு அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் பொதுமக்களை அடிக்கும் உரிமை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை... குற்றம் செய்தவரை தண்டிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.

அரசு துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்களை தாக்கினால், அது மனித உரிமை மீறல் செயலாக கருதி அவர்களின் மீது வழக்கு தொடர்ந்தால் அவர்களின் பதவி பறிபோகும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது..

பற்கள் உடைந்தது

பற்கள் உடைந்தது

எனினும் சட்டமீறல்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. இதுவரைக்கும் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள், திடீரென பாத்ரூமில் வழுக்கி விழுந்த கதையை கேட்டிருப்போம்.. ஆனால், நெல்லையில் வேறு ஒரு அதிர்ச்சி புகார் கடந்த 2 நாட்களாகவே கிளம்பி வருகிறது.. அதுவும் ஒரு போலீஸ்அதிகாரி மீது இந்த புகார் எழுந்துள்ளது.. அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் பல்பீர் சிங்.. இவர் பொறுப்பேற்றபிறகு அம்பாசமுத்திரம் பகுதியில், எங்காவது சிறிய குற்றங்களை நடந்தாலும் சரி, சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, அவர்களது பற்களை பிடுங்கி, தண்டனை தருகிறாராம்.. இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்து, பரபரப்பையும் அதிர்ச்சியையும் கிளப்பி விட்டு வருகிறது.

பற்கள் இடுக்கி

பற்கள் இடுக்கி

ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்தவர் சூர்யா.. இவர் மீது ஒரு புகார் வந்துள்ளது.. அதாவது, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை உடைத்துவிட்டாராம்.. அதனால், இவரை, ஏஎஸ்பி பல்பீர் சிங் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, அவரது பற்களை பிடுங்கி எடுத்துவிட்டாராம்.. வலியால் தான் அலறி துடித்துவிட்டதாக சூர்யா குற்றம் சாட்டியுள்ளார். தன்னைபோலவே, 40 பேருக்கு மேல், பற்களை பிடுங்கிவிட்டதாக, பல்பீர் சிங் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதுவும், இடுக்கியை பயன்படுத்தியே, பற்களை பிடுங்கி எடுத்ததாகவும், இதனால், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 3 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்கிறார்கள்..

பிடுங்கிய பற்கள்

பிடுங்கிய பற்கள்

ஆனால், கருங்கற்களை வைத்து, பற்களை பிடுங்கியதாகவும் சொல்கிறார்கள். இதனிடையே, அத்துடன், பல்லை பிடுங்கியவர்களின் வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் பரவிவிடவும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.. "வழக்கமாக, காவல் நிலையங்களில் தவறு செய்தால் கை கால்களை உடைப்பார்கள், ஆனால், பற்களை பிடுங்கி எடுப்பது இப்போதுதான் தெரியவருகிறது.. எனவே, மனித உரிமை கமிஷனிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும், ஏஎஸ்பி மீது மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும்" நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஆக்‌ஷன் ஆரம்பம்

ஆக்‌ஷன் ஆரம்பம்

எனினும், இப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மையா என்று தெரியவில்லை.. எனவே, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணை அதிகாரியாக சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் முகமதுசபீர் ஆலம் உடனடியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. அந்தவகையில் இன்று முதல் விசாரணையும் ஆரம்பமாகியது.. இதையடுத்து, பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பலவீர்சிங் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.. ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்... இதனிடையே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு கொந்தளித்துள்ளார்.

கன்னத்தில் குருதி

கன்னத்தில் குருதி

"நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு உதடுகளிலும், கன்னத்திலும் குருதி வரும் வரை தாக்கியுமிருக்கிறார் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங். இது கண்டிக்கத்தக்கது! குற்றம் செய்தோரை மட்டுமின்றி, புகார் கொடுக்க வந்தவர்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறார். ஒருவர் புதிதாக திருமணமானவர் என கூறியதால், அவரை உயிர்நாடியில் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார். தாக்கப்பட்டவர்கள் அதற்காக மருத்துவம் பெறுகின்றனர்;உடல்களில் தழும்புகள் உள்ளன.

டாக்டர் ஐயா

டாக்டர் ஐயா

விசாரணை என்ற பெயரில் பல்வீர்சிங் அரங்கேற்றியுள்ள கொடுமைகள் மன்னிக்க முடியாதவை. மனநல பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டுமே இத்தகைய செயல்களில் ஈடுபடுவர். பல்வீர்சிங் போன்ற மனநிலை கொண்டவர்கள் காவல்துறை உயர்பதவிகளில் இருந்தால் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது. உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளையும், மனிதநேயத்தையும் மதிக்காத காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் மீது உடனடியாக வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார் டாக்டர் ஐயா..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+