நாளைக்கு கல்யாணம்.. பார்ட்டியே வெக்கல.. அதான் கழுத்தை.." மாப்பிள்ளையை கொன்ற சங்கிலி முருகன் கதறல்
புதுமாப்பிள்ளை கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்
தென்காசி: "நாளைக்கு கல்யாணம்.. இன்னைக்கு கூட பார்ட்டி வெக்கலேன்னா எப்படி.. அதான் கொன்னுட்டேன்.. ஆனா பாருங்க.. கழுத்தை அறுக்கும்போது ரத்தம் ரொம்ப வந்துடுச்சு.. எனக்கு பயமாயிடுச்சு.. அதான் அவனை என் மடியில போட்டுட்டு அழுதேன்" என்று புதுமாப்பிள்ளையை வெட்டி கொன்ற அவரது தங்கை புருஷன் சங்கிலிமுருகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன்... ஜேசிபி ஆபரேட்டராக இருந்தவர்.. இவருக்கும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கும் வருகிற 6-ம் தேதி நாளை திருமணம் நிச்சயக்கப்பட்டு இருந்தது.
இதற்கான ஏற்பாடுகளும் படு தீவிரமாக நடந்து வந்தன... இந்நிலையில் நேற்று முழுவதும் பரபரப்பாக கல்யாண வேலையை மாப்பிள்ளை வீட்டினர் பார்த்து கொண்டிருந்தனர்.. அதனால் தூங்கவே நள்ளிரவு ஆகிவிட்டது. முனியப்பன், அவரது அம்மா பஞ்சவர்ணம், தங்கை முனீஸ்வரி 3 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

நடுராத்திரி
நடுராத்திரி 2.30 மணி இருக்கும்.. திடீரென ஒரு அலறல் சத்தம் கேட்டது.. அதனால் அலறி அடித்து கொண்டு எழுந்தபோதுதான், முனியப்பனை யாரோ கத்தியால் அறுத்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார் முனியப்பன்.. தகவலறிந்து போலீசாரும் வந்துவிட்டனர்.. உடலை மீட்டு விசாரணையும் ஆரம்பித்தனர்.

ரத்தக்கறை
அப்போதுதான் சங்கிலிமுருகன் மீது சந்தேகம் அதிகமானது.. இவர் முனியப்பனின் தங்கை முனீஸ்வரியின் கணவர்... அவர் வீட்டின் சுவற்றில் ரத்தக்கறை படிந்திருந்தது.. அதனால் சங்கிலிமுருகனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் சந்தேகப்பட்டபடியே சங்கிலி முருகன்தான் இந்த கொலையை செய்துள்ளார்.

பார்ட்டி
வாக்குமூலத்தில் சொல்லும்போது, நான் அந்த வீட்டு மாப்பிள்ளை.. ஆனா என்னை மதிக்கிறதே இல்லை.. கல்யாணத்துக்கு பார்ட்டி கேட்டேன்... அதுவும் வெக்கல.. நாளைக்கு கல்யாணம்.. இதுக்கப்பறம் எப்பதான் பார்ட்டி வெக்க முடியும்? அதனாலதான் 50 ரூபாய்க்கு ஒரு காய்கறி நறுக்கும் கத்தியை வாங்கி வந்து, தூங்கும்போது முனியப்பன் கழுத்தை அறுத்து விட்டேன்.

அழுதேன்
ஆனா கழுத்தை அறுத்துட்டே இருக்கும்போது ரத்தம் வந்துடுச்சு.. அந்த ரத்தத்தை பார்த்ததும் எனக்கு பயமாயிடுச்சு.. அதனாலதான் அவனை என் மடியில் போட்டு அழுதேன்.. அப்பறம் யாருக்கும் தெரியாம என் வீட்டிற்குள் வந்து படுத்து கொண்டேன்" என்று திகில் வாக்குமூலம் தந்துள்ளார் சங்கிலி முருகன். தொடர் விசாரணை நடந்து வருகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications