தஞ்சமடைந்த காதல் ஜோடிக்கு போலீஸார் முன்னிலையில் கத்திக்குத்து.. பரபர விசாரணை
நெல்லையில் காதல் ஜோடிக்கு கத்தி குத்து விழுந்துள்ளது
நெல்லை: காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நெல்லை டவுன் கோடிஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த ராஜ்.. தனியார் வங்கியில் வேலை பார்க்கிறார்.. இவரும், அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற 21 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள்.. அதனால் பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று மதியம் ராமையன்பட்டி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் ரம்யாவும், ஆனந்தராஜும் திருமணம் செய்துள்ளனர்.

திருமணம்
பெண் வீட்டார் இருவரையும் தேடிவந்த நிலையில், ஆனந்தராஜ் -ரம்யா தம்பதியர் காதல் திருமணம் செய்துகொண்டதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கோரி பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்...

முதலுதவு
பேட்டை காவல் ஆய்வாளர் இரண்டு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், பெண்ணின் சகோதரர் ராம்குமார் காவல் நிலையத்திற்கு வந்த வேகத்தில் கையில் இருந்த கத்தியை கொண்டு ரம்யா மற்றும் ஆனந்தராஜை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கத்திகுத்து
காதலர்களை காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்திய ராம்குமார் மற்றும் அவருடன் வந்த மூவரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்திற்குள் புகுந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடிகளை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணங்கள்
இந்திய சமுதாயத்தை பொறுத்தவரை, காதல் திருமணங்களை விட பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தி வைக்கப்படும் திருமணங்களே இன்றளவும் சிறந்ததாக கருதப்படுகின்றன... சுமார் 80 - 85% மக்கள் நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை செய்யவே விரும்புவதாக ஒரு ஆய்வு சொல்கிறது.

பிரச்சனை
இதற்கு காரணம், பெரும்பாலும் ஒருவருக்கு ஒருவர் தங்களை மாற்றி கொள்ள நினைக்காமல் அவர்களின் விருங்களுக்கு ஏற்பவே வாழ நினைப்பார்கள்... இதற்கு துணை ஒத்துழைக்காவிட்டால் பிரச்சனை தான்... மேலும், காதலிக்கும் போது இதையெல்லாம் யோசிக்காமல், ஒன்றாக சேர்ந்து வாழும் போது தான் உண்மை நிலவரம் இருவருக்குமே புரியும்... பிறகு பிரிவு, டைவர்ஸ் என்று கோர்ட் வரை செல்வதாலேயே பெற்றோர்கள் எதிர்ப்பு காட்டி வருகிறார்கள்.

புரிதல்
அதே சமயம் இந்தியாவில் ஒருகுறிப்பிட்ட அளவினரே, கலாச்சார வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், குடும்பத்தினருடன் உடன்படாமல் காதல் திருமணத்தை தேர்வு செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.. ஆனால், காதல் திருமணம் செய்து சிறப்பாக வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. பெற்றோர் மணமுடித்து வைத்து டைவர்ஸ் ஆனவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அனைத்துக்குமே புரிதல்தான் காரணம்... புரிதல் மட்டும் இருந்தால் போதும், வாழ்க்கையின் மகிழ்ச்சி எளிதானதே என்பது பலரது கருத்தாக உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications