நெல்லை திமுக மேயர் பதவி தப்பியது.. ஒரு கவுன்சிலர் கூட வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. வாக்கெடுப்பு இன்று நடக்கவிருந்த நிலையில் ஒரு கவுன்சிலர் கூட பங்கேற்காததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்பட்டது.
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளார். இந்நிலையில், கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு வருகிறது.

நெல்லை மாநகராட்சி மேயரை மாற்றக்கோரி கவுன்சிலர்கள் பலர் அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து முறையிட்டனர். மேயரை மாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினர். இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று மேயர் மற்றும் கவுன்சிலர்களை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்ரேவிடம் மேயர் சரவணனுக்கு எதிராக 38 திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்தனர். இதனையடுத்து கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 12அம் தேதி (இன்று) நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த 9ஆம் தேதி நெல்லை தனியார் ஹோட்டலில் அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக கவுன்சிலர்கள் மற்றும் நெல்லை திமுக முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசினார். இந்த கூட்டத்தின் போது திமுக கவுன்சிலர்கள் மேயர் சரவணனுக்கு எதிராக புகார்களை அடுக்கினர். அப்போது திமுகவைச் சேர்ந்த மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது கட்சி தலைமையின் உத்தரவை மீறுவது ஆகும். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்த தயார் நிலையில் இருந்தனர். மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், நெல்லை மாநகர ஆணையாளர் தாக்கரே சுபம் ஞான தேவராவ் மாமன்ற கூட்ட அரங்கிற்கு காலை 10.30 மணியளவில் வருகை தந்தார். 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது.
நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டம் ஆரம்பமான நிலையில் ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை. அரைமணி நேரம் ஆகியும் எந்த ஒரு கவுன்சிலரும் வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இதனை மாநகராட்சி ஆணையர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். போதிய கோரம் இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது, மாமன்ற விதிப்படி அடுத்த ஓராண்டுக்கு மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இயலாது என்று கூறினார்.
திமுக கவுன்சிலர்கள் அனைவரும் இரு குழுக்களாக சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சித் தலைமை மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிவுறுத்தலின் பேரில், நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து, திமுக கவுன்சிலர்கள் அனைவரும் சுற்றுலா சென்றுள்ளதாகத் தெரிகிறது. கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்துக்கு வராததால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்து, மேயர் சரவணனின் பதவி தப்பியுள்ளது.
-
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications