குமரி, நெல்லை கூடங்குளம் கடலோர பகுதிகளில் நிலநடுக்கமா? பரவிய தகவல்.. ஆட்சியர் விளக்கம்
நெல்லை: நெல்லை மாவட்ட கடற்கரை பகுதிகளான கூடங்குளம் கூத்தங்குழி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில் நெல்லை ஆட்சியர் பா கார்த்திகேயன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரியில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் பரவியது. குறிப்பாக விவேகானந்தர் பாறை உள்ளிட்ட பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதேபோல் நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் இன்று மாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது.

கூடங்குளத்தில் அணு உலை உள்ள நிலை உள்ள நிலையில், அங்கு நில அதிர்வு ஏற்பட்டதாக வெளியான தகவலால் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் கூடங்குளம் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் பா கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நில அதிர்வு ஏற்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் பா. கார்த்திகேயன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நெல்லையின் சில பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுவதற்கு ஆதாரம் இல்லை. நெல்லையில் கடந்த ஒரு மாதத்தில் எந்த நில அதிர்வும் பதிவாகவில்லை.
நில அதிர்வு உணரப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்றும், அதை யாரும் நம்ப வேண்டாம்" என்று கூறினார். இதற்கிடையே, கூடங்குளம் அருகே உள்ள இருக்கன் துறை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கல்குவாரியில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் போது அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications