அமரன் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டுவீச்சு.. பரபரத்த நெல்லை.. வெளியான ‘ஷாக்’ சிசிடிவி காட்சி
நெல்லை: 'அமரன்' திரைப்படம் ஓடும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள அலங்கார் திரையரங்கில் இன்று அதிகாலையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி வீடியோ வெளியாகியுள்ளது.
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ளது அலங்கார் திரையரங்கம். இங்கு, தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்', சூர்யா நடித்துள்ள 'கங்குவா' ஆகிய திரைப்படங்கள் ஓடி வருகின்றன. இந்நிலையில், இன்று அதிகாலையில் அங்கு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இன்று அதிகாலையில் அலங்கார் திரையரங்கின் முன்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றுள்ளனர். பயங்கர சத்தத்துடன் பெட்ரோல் குண்டுகள் வெடித்துள்ளன. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசியது சிசிடிவி காட்சி வாயிலாக தெரியவந்துள்ளது. மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு இருவரும் அங்கிருந்து ஓடி தப்பித்துள்ளனர். திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications