ரவுடி தீபக் ராஜா கொலை வழக்கில் சிக்கிய 5 பேர்.. ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் ரவுடி தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தைச் சேர்ந்தவர் தீபக் ராஜா. இவர் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகர் உள்ள பிரபல ஹோட்டலில் தனது காதலியுடன் உணவருந்த சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police intensively interrogate 5 people in Nellai rowdy Deepak Raja murder case


வெட்டிக் கொல்லப்பட்ட தீபக் ராஜா மீது ஏற்கனவே கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், தீபக் ராஜாவுக்கு சாதி ரீதியான பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும் சாதி மோதல் காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தீபக் ராஜா கொலை செய்யப்படும்போது பதிவான சிசிடிவி காட்சி வெளியானது. அதில் மர்ம நபர்கள் 6 பேர் தீபக் ராஜாவை ஹோட்டலுக்கு வெளியே சில அடி தூரத்தில் இருந்து கையில் அரிவாளுடன் கொலை வெறியோடு துரத்துகின்றனர். உயிருக்கு பயந்து ஓடிய தீபக் ராஜா அங்கிருந்த கார் ஒன்றில் மோதி ஓட்டல் வாசல் முன்பு நிலைதடுமாறி கீழே விழுகிறார்.

அவர் கீழே விழுந்த அடுத்த நொடியே அந்த 6 பேர் கும்பல் அரிவாளால் தீபக் ராஜாவின் முகத்தை குறிவைத்து சரமாரியாக வெட்டுகின்றனர். முதல் வெட்டிலேயே தீபக் ராஜா மூர்ச்சையடைந்து விழுந்த நிலையில், தொடர்ந்து அந்த கும்பல் தீபக் ராஜாவை வெறி கொண்டு வெட்டும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து அந்த கும்பல் அருகில் இருந்த கார் ஒன்றில் ஏறி தப்பி ஓடியது.

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் வெட்டிக் கொலை..முகத்தையே குறிவைத்த கும்பல்! குலைநடுங்க வைக்கும் சிசிடிவி


மேலும், தீபக் ராஜா வெட்டப்படுவதை பார்த்து ஹோட்டல் வாசலில் நின்றிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட போது அவருடன் வந்த காதலி ஹோட்டல் உள்ளே இருந்துள்ளார். பின்னர் மக்கள் அலறியடித்து ஓடுவதை கண்டு வெளியே வந்து பார்த்தபோதுதான் தீபக்ராஜாவை மர்ம கும்பல் கொலை செய்தது அவருக்கு தெரியவந்தது

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பி ஓடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நெல்லை ரவுடி தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரகசிய இடத்தில் வைத்து 5 பேரிடமும் பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+