காதலியை பிடிக்கலை.. கழற்றிவிட பார்த்தும் விரட்டியதால் தற்கொலை.. போலீஸ்காரர் மரணத்தில் பரபரப்பு
துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை: காதலியை கல்யாணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை.. கழட்டிவிட்டாலும் திரும்ப திரும்ப காதலி விரட்டி கொண்டே இருந்ததால், போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நித்திரவிளையை அடுத்த பாறையடியை சேர்ந்தவர் அஜின்ராஜ். இவருக்கு வயது 26. நெல்லை மாவட்டம் மணி முத்தாறு 9-வது பட்டாலியனில் வேலை பார்த்து வந்த அஜினுக்கு கோதையாறு நீர் மின் நிலையத்தில் பாதுகாப்பு பணி போடப்பட்டிருந்தது.
நேற்று பணியில் இருந்தபோது, பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாகியால் தன்னையே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் அஜின். இதனால் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் பதறி போய் ஓடி சென்று பார்த்தார்கள். அப்போ கழுத்தில் குண்டடி பட்டு, ரத்த வெள்ளத்தில் அஜின் மிதந்து கிடந்தார்.

வேலை கிடைத்தது
இதையடுத்து விசாரணை ஆரம்பமானது. முதல்கட்ட தகவலில் அஜினுக்கு அவரது ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவிமீது காதல் இருந்ததும், இதனால்தான் தற்கொலை என்றும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், போலீஸ் வேலை கிடைத்ததும் காதலியை கொஞ்சம் கொஞ்சமாக கழட்டி விட முயன்றுள்ளார் அஜின். இது தொடர்பாக காதலி நித்திரவிளை போலீசில் புகார் செய்திருக்கிறார். அந்த புகாரின் பேரில் போலீசாரும் அஜினை விசாரித்தனர்.

உத்தரவாதம்
உடனே அஜினும், இன்னும் 6 மாசத்தில் காதலியை கல்யாணம் செய்து கொள்வதாக என்று உத்தரவாதம் அளித்துள்ளார். அதன்படி கெடுவும் முடிந்துள்ளது. திரும்பவும் காதலி அஜினை தொடர்பு கொண்டு கல்யாண பேச்சை ஆரம்பித்திருக்கிறார்.

களியக்காவிளை
அதற்கு அஜின், நாளை (அதாவது நேற்று) இருவரும் ஊரில் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்லி உள்ளார். அதன்படி காதலியும் ஊரில் கல்யாணத்துக்காக காத்திருந்தார். ஆனால் அஜின் அங்கு போகவே இல்லை. இதனால் திரும்பவும் காதலி களியக்காவிளை போலீசில் போய், அஜின் ஊருக்கு வரவில்லை என்று சொன்னார். உடனடியாக அஜினை போலீசார் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

கதறி அழுதார்
இந்தநிலையில்தான், கோதையாறு நீர் மின் நிலையத்தில் அஜின் தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. இதைக் கேட்டதும் காதலி கதறி கதறி அழுதார். அஜின் தற்கொலை சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது. காதலியை திருமணம் செய்து கொள்ள பிடிக்காமல் அஜின் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications