உறுதியாமே! அரசியலுக்குள் நுழையும் பொன் மாணிக்கவேல்? வந்து விழுந்த கேள்வி! அவரது பதில் என்ன? அதிரடி
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் கோவில்களை பாதுகாக்க வேண்டும். சிலைகளை மீட்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்து பணி ஓய்வு பெற்ற பொன் மாணிக்கவேல் கூறி வரும் நிலையில் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு அவர் உறுதியான பதிலை அளித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
தமிழ்நாட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்தவர் பொன் மாணிக்கவேல். தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்ட ஏராளமான சிலைகளை மீட்டு கொண்டு வந்தார். இதனால் அவர் ஓய்வு பெற்றாலும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு சிறிது காலத்தில் அவர் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் தான் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு பொன் மாணிக்கவேல் சென்று வருகிறார். அப்போது தமிழ்நாட்டில் உள்ள கோவில்களை பராமரிப்பது தொடர்பாகவும், சிலை மீட்பு குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் தான் திருநெல்வேலியில் பொன் மாணிக்கவேல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் 38,000க்கும் அதிகமான கோவில்கள் உள்ன. இதில் ஆயிரக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்துள்ளன. வருவாய் அடிப்படையில் கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை தரம் பிரிக்கிறது. இது தவறான விஷயமாகும்.
இப்போதைய ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பணமே பிரதானமாக இருக்கிறது. இது தவறானது. கோவில்களை கார்ப்பரேட்வியாபார நிறுவனம் போல் மாற்றுகின்றனர். இறைநம்பிக்கை இல்லாதவர்கள் பொக்கிஷமாக பார்க்க வேண்டும். இறை நம்பிக்கை உள்ளவர்கள் திருக்கோவில்களாக பார்க்க வேண்டும். இந்த 2 விஷயத்தையும் பார்க்க மாட்டோம் என்றால் தமிழ்நாட்டை விட்டு இடத்தை காலி செய்துவிட்டு வெளிநாடு செல்ல வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையினர் கோவில்களை வருமான கண்ணோட்டத்தோடு பார்ப்பதை மாற்றி கொள்ள வேண்டும். அர்ச்சகர்களுக்கு போதிய ஊதியம் வழங்குவது இல்லை. இதனால் வரும்காலத்தில் 28,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லாத நிலை ஏற்படும்'' என்றார்.
இந்த வேளையில், ‛‛நீங்கள் அரசியலுக்கு வருவதாக பேசப்படுகிறதே'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பொன் மாணிக்கவேல், ‛‛எப்படியாவது அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை. மூச்சு போகும் வரை கோவில்களுக்காக வேலை செய்வேன்'' என்றார்.
முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டையில் பொன் மாணிக்கவேல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போதும் அவரிடம் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பொன் மாணிக்கவேல்ல, ‛‛எனக்கு எந்த அரசியல் கட்சியாவது பதவி கொடுத்தால் அதை தூக்கி குப்பையில் தான் போடுவேன்'' என தெரிவித்தார். அதேபோல் இப்போதும் அவர் அரசியலில் நுழையமாட்டேன் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications