அவர் மீது யாரும் கை வைக்கக் கூடாது.. கள்ளக்காதலனுக்காக கொந்தளித்த பெண்.. ஷாக் ஆன டீன் ஏஜ் வயது மகள்!
தாயை கள்ளக்காதலனுடன் அறைக்குள் மகள் பூட்டி வைத்துவிட்டார்
நெல்லை: "என் அம்மாவுக்கும், என் புருஷனுக்கும் கள்ள உறவு.. அதனாலதான் எனக்கும் இந்த இளைஞனுக்கும் கள்ள உறவு" என்று சொல்லி போலீசாரை கிறுகிறுக்க வைத்துள்ளார் ஒரு டீச்சர்!
பாளையங்கோட்டை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண், நெல்லையில் ஒரு அரசு பள்ளியில் டீச்சராக வேலை பார்க்கிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இந்த டீச்சருக்கு வயசு 40 ஆகிறது. 15 வயசில் 10-வது படிக்கும் பெண் இருக்கிறாள்.
இந்நிலையில் டீச்சருக்கு நாகர்கோவிலை சேர்ந்த 29 வயசு இளைஞர் ஒருவர் பழக்கமாகி உள்ளார். இதனால் அடிக்கடி வீட்டுக்கும் வந்து போகவும், இருவருக்குள்ளும் கள்ள தொடர்பு பற்றி கொண்டது. இவர்கள் இப்படி நெருக்கமாக பழகி வந்தது 15 மகளுக்கு தெரிய வந்துள்ளது போலும்.

கள்ளக்காதலன்
இந்த நிலையில், மகள் வீட்டில் இருக்கும்போதே அந்த இளைஞரை வீட்டுக்கு வரழைத்த தாய், அறைக்குள் கூட்டிக் கொண்டுபோய், உள்பக்கமாக தாழ்ப்பாளும் போட்டு போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகள், கள்ளக்காதலன், அம்மா இருவரையும் அந்த ரூமுக்குள்ளேயே வைத்து வெளிப்பக்கமாக பூட்டி விட்டு, சொந்தக்கார்களுக்கும் போன் போட்டு சொல்லி விட்டார்.

போலீஸ்
கொஞ்ச நேரத்தில் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வந்து, இளைஞரை பிடித்து சரமாரியாக வெளுத்து வாங்கியதுடன் மேலப்பாளையம் போலீசிலும் ஒப்படைத்தனர். அப்போது, கள்ளக்காதலனுடன் தான் நான் வாழ்வேன், அவர்மீது யாரும் கை வைக்கக்கூடாது என்று டீச்சர் போலீசாரிடம் அடம் பிடித்தார்.

கள்ள உறவு
இதை பற்றி போலீசாரிடம் டீச்சர் சொல்லும்போது, "என் புருஷனுக்கு 68 வயசாகுது. முதல்ல என் அம்மாவுக்கும் என் புருஷனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துச்சு. அவங்களுக்கு என்னைக்குமே உறவு நீடிக்கணும்னு என்னை, எங்க அம்மா அவருடைய கள்ளக்காதலனை அதாவது என் புருஷனை எனக்கு கட்டி வெச்சிட்டாங்க. அதனால அவர்கூட வாழவே எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் இந்த இளைஞரோட 10 வருஷமா கள்ள உறவு வெச்சிருக்கேன். அதனால அவர் மீது யாரும் கை வைக்ககூடாது" என்றார்.

மகளிர் காப்பகம்
இந்நிலையில், இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க சொந்தக்கார்கள் யாருமே புகார் தரவில்லை. போலீசில் ஒப்படைத்து விட்டார்களே தவிர, புகார் தரவில்லை. ஆனால் புகார் கொடுத்தால்தான் போலீசாரால் நடவடிக்கை முடியும் என்பதால், இளைஞரை எச்சரித்து திருப்பி அனுப்பினர். இதையடுத்து, "நான் வீட்டுக்கு போக மாட்டேன், அங்க போனால் என்னை கொன்னுடுவாங்க" என்று டீச்சர் சொல்லவும், போலீசார் அவரை நெல்லையில் உள்ள ஒரு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications