ஆத்தா.. காளியம்மா.. ஆஹா.. சு. பொன்னுத்தாய்க்கு சாமி வந்துருச்சே.. பரபரத்த சிவகிரி!
தென்காசி அமமுக வேட்பாளர் பொன்னுதாயி திடீரென சாமி வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகிரி: விஷயம் தெரியுமா.. அமமுக வேட்பாளர் பொன்னுதாய்.. ஸாரி சு.பொன்னுதாய்-க்கு திடீரென்று சாமி வந்துவிட்டதாம்! கோயிலில் சாமி கும்பிட்டு கொண்டே இருந்தாராம்.. அப்போதுதான் அம்மா.. தாயே என்று சாமியாட ஆரம்பித்துவிட்டாராம்!
தென்காசி தொகுதியில் அமமுக வேட்பாளராக களம் இறங்குபவர் சு.பொன்னுதாய். ஏற்கனவே இவர் பெயரில் இங்கு 4 பெண் வேட்பாளர்கள், இதே பெயரில் உள்ளார்கள். இதனால் பெயர் குழப்பத்தில் தொகுதி மக்கள் குழம்பி உள்ளனர்.

இந்நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில் பொன்னுதாய் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினமும் பிரச்சாரத்துக்கு சென்ற பொன்னுதாயி, சிவகிரி அருகே தேவிபட்டினம் தட்டாங்குளம் காளியம்மன் கோயிலில் சாமி கும்பிட சென்றார்.
அவருடன் தொண்டர்கள், ஆதரவாளர்களும் உடன்சென்றனர். சாமி கும்பிட்டு கொண்டே இருந்த பொன்னுதாயிக்கு திடீரென சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். இதை பார்த்து கட்சி தொண்டர்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் பொன்னுதாயி "ஆத்தா.. தாயீ.." என்று கூறியபடியே அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டார். பின்னர், கோயிலில் இருந்த அனைவருக்கும் பொன்னுதாயி நெற்றியில் விபூதி பூசிவிட்டார்.
அங்கிருந்தவர்கள் எல்லோரும் பொன்னுதாயியை கையெடுத்து கும்பிட்டு வணங்கினார்கள். கொஞ்சம் நேரம் கழித்து இயல்பு நிலைக்கு வந்தார் பொன்னுதாயி, தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications