தென்காசி முத்துமாரி இருந்த கோலம்.. போலீஸையே நம்ப வைத்த கணவனின் அபார நடிப்பு.. கடைசியில் ட்விஸ்ட்
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலாங்குளத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் மாற்றுதிறனாளியாவார். இவருக்கும், முத்துமாரி என்ற பெண்ணுக்கும் 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவனை பிரிந்து திருச்சியைச் சேர்ந்த இளைஞருடன் முத்துமாரி 4 வருடம் முன்பு சென்றுவிட்டாராம். கடந்த 4 மாதம் முன்பு திரும்பி வந்த முத்துமாரியை கண்காணித்து வந்த முத்துப்பாண்டியனால் இப்போது என்ன நடந்தது தெரியுமா? திருமணத்தை மீறிய உறவு மற்றும் சந்தேகத்தால் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருமணத்தை மீறிய உறவு என்பது இன்றைக்கு பல குடும்பங்களை நிலைகுலைய வைத்துள்ளது. இவர் சரியில்லை என்று அவர், அவர் சரியில்லை என்று இன்னொருவர் என ஆணும் பெண்ணும் வாழ்க்கையை மாற்றிக்கொள்கிறார்கள். அதேபோல் மனைவிக்கு தெரியாமல் கணவரும், கணவருக்கு தெரியாமல் மனைவியும் தவறான உறவினை தேர்வு செய்கிறார்கள்.

கள்ளக்காதல்
இந்த தவறான உறவை சமூகம் என்றைக்குமே ஏற்காது என்று தெரிந்தாலும், அதை விட முடியாமல், ஒன்று அவர்களையே அழித்துக் கொள்கிறார்கள். இல்லை என்றால் எதிராக இருக்கும் துணையை அழித்துவிடுகிறார்கள். கடைசியில் சிறையில் கம்பி எண்ணுகிறார்கள். இன்னும் சிலர் மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டதை ஏற்க மனம் இல்லாமல் அவரையே இல்லாமல் செய்துவிடுகிறார்கள். அப்படித்தான் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் செய்த செயல் பற்றி பார்ப்போம்.
தென்காசி முத்துமாரி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலாங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த 38 வயதாகும் முத்துப்பாண்டியன் என்பவர் காது கேட்காத மாற்றுத்திறனாளியாவார். இவர் தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துக்குமாரிக்கு 28 வயது ஆகிறது. இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். முத்துக்குமாரிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சென்று விட்டாராம்.
கணவனே புகார்
4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வந்த அவர் முத்துப்பாண்டியனுடன் சோ்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார். இருந்தபோதும், மனைவியின் நடத்தையில் முத்துப்பாண்டியனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறதாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தகராறில் முத்துக்குமாரி உயிரைவிட்டதாக முத்துப்பாண்டியன் சின்னகோவிலாங்குளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை அறிக்கை
சின்னகோவிலாங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்துக்குமாரியின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசாருக்கு முரண்பாடான தகவல் கிடைத்தது. அதாவது, முத்துக்குமாரி மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.
நாடகம் அம்பலம்
இதையடுத்து முத்துப்பாண்டியனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் சம்பவத்தன்று மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட முத்துப்பாண்டியன் ஆத்திரத்தில் முத்துக்குமாரியின் கழுத்தை நெரித்தும், அவரது மூக்கு, வாயை பொத்தியும் கொலை செய்ததாக கூறியிருக்கிறார். பின்னர் உடலை தூக்கில் தொங்கவிட்டு, தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி அனைவரையும் நம்ப வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு பிறகு முத்துப்பாண்டியனை கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே மனைவியை தீர்த்துக்கட்டி விட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications