குரல் என்னோடதில்லைனு சொல்றாரே.. குழந்தை இல்லைனு சொல்ல ஏன் மறுக்கிறார்- தங்கதமிழ்செல்வன் கேள்வி
Recommended Video

குற்றாலம்: குரல் என்னோடதில்லைனு சொல்லும் ஜெயக்குமார் குழந்தை என்னோடதில்லைனு சொல்ல ஏன் மறுக்கிறார் என்று தங்கதமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அமைச்சர் ஜெயக்குமாருடன் ஒரு பெண் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அந்த பெண்ணின் பெண்ணுக்கும் அமைச்சருக்கும் தொடர்பிருப்பது போன்றும் அதனால் அவர் கருத்தரித்தது போன்றும் அந்த கருவை கலைக்குமாறு அமைச்சர் சொல்வது போன்றும் ஆடியோவில் உள்ளது.
வைரலாகும் இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஆடியோ போலியானது என்று அமைச்சர் ஜெயக்குமாரும் மறுப்பு தெரிவித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
[ஜெயக்குமார் ஆடியோவுக்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமுமில்லைங்க- தங்கதமிழ்ச்செல்வன்]

ஒளித்து விளையாடுவது
மேலும் இது மன்னார்குடி மாபியா கும்பலின் சதி என்றும் ஒளிந்து கொண்டே கிரிமினல் வேலை செய்வதில் டிடிவி தினகரன் கில்லாடி. அப்படித்தான் அவரது ஆதரவாளர்களை தற்போது குற்றாலத்தில் ஒளித்து வைத்துள்ளார் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

ரிசார்ட்டில்
இதனிடையே குற்றாலத்தில் இசக்கி ரிசார்டில் தங்கியுள்ள 18 தகுதிநீக்க எம்எல்ஏக்களும் இரு அதிமுக எம்எல்ஏக்களும் புஷ்கரணி விழாவில் கலந்து கொள்ள ரிசார்ட்டில் இருந்து புறப்பட்டனர். அப்போது தங்கதமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.

குழந்தை இல்லை
அவர் கூறுகையில் அது என் குரல் இல்லைனு சொல்றாரே தவிர அது என் குழந்தையில்லைனு சொல்ல மாட்றாரே. அதுதானே மெயின், குரல் இவருதா இல்லையான்றது இப்போது தேவையில்லை. குழந்தை என்னோடதில்லைனு சொல்ல வேண்டியதுதானே.

தவறு இருக்கா
டி ஜெயக்குமார் என்று பிறப்பு சான்றிதழில் இருந்தால் அதுநான் ஒருவர் தானா என கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜெயக்குமார் மீது தவறு இருப்பது போன்று ஒரு வீடியோ ஆதாரம் உள்ளது. இதைவிட வேறு என்ன வேண்டும். உளவுத்துறை, போலீஸ் எல்லாமே இவங்க கையில்தானே இருக்கும். அமைச்சர் மீது தவறு இருக்கா இல்லையா என்பதை கண்டுபிடிக்க வேண்டியதுதானே.

நல்ல காலம் பிறக்க வேண்டும்
ஆடியோ வெளியிட்டது மாபியா என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். அது மாபியா இல்லை. அவரோட மாமியார் வெளியிட்ட ஆடியோ. ஒன்றரை ஆண்டுகளாக நாங்கள் பட்ட கஷ்டத்துக்கு இன்னும் ஓரிரு நாளில் பிரதிபலன் கிடைத்து விடும் என்று நம்புகிறோம். புஷ்கரணியில் நீராடல் மூலம் இன்றுடன் எல்லாம் முடிந்து நல்ல காலம் பிறக்க வேண்டும் என நம்புகிறோம் என்றார் தங்கதமிழ்ச்செல்வன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications