நெல்லையில் சாதிப் பிரச்சனை இல்லை.. சிறார் பிரச்சனையை அப்படி சொல்லாதீர்கள்.. சபாநாயகர் அப்பாவு!
நெல்லை: தமிழ்நாட்டில் எங்குமே சாதி பிரச்சனை இல்லை என்றும், நெல்லையில் சாதி பிரச்சனை இல்லவே இல்லை என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். பணம் கொடுத்து கொலை குற்றங்களில் ஈடுபட சிறார்களின் மனநிலையை மாற்றுவதாக குற்றம்சாட்டிய அப்பாவு, சிறார்களை இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அண்மையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் புறநகரில் 211 பேரும், மாநகரில் 74 பேரும் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியாகியது.

அதிலும் கொலை சம்பவங்கள் தொடர்பாக 60 இளம் சிறார்கள் கைது செய்யப்பட்டது மாநில அளவில் விவாதமாகியது. அதேபோல் பெருமாள்புரம், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர், பேட்டை பகுதியில் சாதி ரீதியான கொலைகள் அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், நெல்லையில் இதுவரை 9 வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு 6,312 பேர் பணியில் சேர்ந்திருக்கிறார்கள். அரசுப் பணிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு 266 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். தற்போதைய வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணியினை பெற்றுள்ளார்கள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நெல்லை குற்றச் சம்பவங்கள் தொடர்பான கேள்விக்கு, திமுக ஆட்சிக்கு வந்தபின் சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது. ஜாகீர் உசேன் கொலை வழக்கில் நிலப் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை உள்ளிட்டவை இருந்து வந்துள்ளது. எந்த சம்பவத்திற்காவது அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா? அதேபோல் கடந்த ஆட்சியை ஒப்பிடும் போது தற்போது குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சிறார்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்பான கேள்விக்கு, குழந்தைகள், மாணவ பருவத்தில் இருப்பவர்களை பெற்றோர் கொஞ்சம் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். அவர்களின் நண்பர்கள் யார் என்பதை கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் சிறுவர்கள், மாணவர்களை எளிதாக மூளைச்சலவை செய்து இதுபோன்ற செயல்களை செய்ய வைக்கிறார்கள்.
மாணவர்களை மூளைச்சலவை செய்து பல்வேறு சம்பவங்களில் ஈடுபட வைப்போரை அடையாளம் கண்டு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். சாதி பிரச்சனை இருப்பதாக நினைக்காதீர்கள். ஏனென்றால் திருநெல்வேலியில் சாதி பிரச்சனை நடக்கவில்லை. அது இருந்தால், ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு யாரும் செல்ல முடியாது. தமிழ்நாட்டில் சாதி பிரச்சனை இல்லை. நெல்லையிலும் இல்லை.
தனிப்பட்ட தகராறு பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது. அதேபோல் பணம் கொடுத்து கொலை குற்றங்களில் ஈடுபட சிறார்களின் மனநிலையை மாற்றுகின்றனர். அதேபோல் மாணவர்கள் பலருக்கும் சாதி என்றால் என்னவென்றே தெரியவில்லை. சிறுவர்கள் இடையிலான பிரச்சனையை சாதிய பிரச்சனையாக சொல்லாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications