IOB ஏடிஎம்மில் கொட்டிய ரூ.2 லட்சம்.. திகைத்த திருநெல்வேலி அல்போன்ஸ்! நெல்லை எஸ்பி சிலம்பரசன் சூப்பர்
திருநெல்வேலி: திருநெல்வேலி எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட காவல் துறையினரின் வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி. சிலம்பரசன் போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார். அதேபோல, வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார். பிறகு ஏர்வாடி அல்போன்ஸுக்கும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். யாரிந்த அல்போன்ஸ்?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏஎஸ்பி, டிஎஸ்பிக்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி.சிலம்பரசன் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வு கூட்டம்
இதில் மாவட்டத்திலுள்ள வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையிலுள்ள வழக்குகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்வது , பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிப்பது, ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் நீதிமன்ற அலுவல்கள், போன்றவை குறித்தெல்லாம் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பிறகு, மாவட்டத்தில் கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் உள்ள சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு தண்டனை பெற்று தந்த போலீஸ் அதிகாரிகள், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்த எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது மற்றும் போதைப் விற்பனையில் ஈடுபட்டோரை திறம்பட செயல்பட்டு கைது செய்தது போன்ற செயல்களில் ஈடுபட்டு சிறப்பாக பணிபுரிந்த 156 பேரை மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
ஏர்வாடி அல்போன்ஸ்
அந்தவகையில் ஏர்வாடி அல்போன்ஸுக்கும் தனிப்பட்ட முறையில் மாவட்ட எஸ்.பி.யிடமிருந்து பாராட்டு கிடைத்தது.. யாரிந்த அல்போன்ஸ் தெரியுமா? ஏர்வாடியை சேர்ந்த அல்போன்ஸ் வயது 22 ஆகிறது. கடந்த 3ம் தேதி ஏர்வாடியில் உள்ள ஐஓபி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றிருக்கிறார்..
அப்போது அங்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளார்.. யாரோ அந்த பணத்தை தவறவிட்டு சென்றுள்ளதை அறிந்து, உடனே அப்பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் நோக்கில், ஏர்வாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஒப்படைத்துள்ளார்..
எஸ்பிக்கு போன தகவல்
ஏர்வாடி போலீசாரும் இதுகுறித்து விசாரணையை மேற்கொண்டபோது, அந்த பணம் நம்பிநத்தலைவன்பட்டையம், கீழத் தெருவை சேர்ந்த இசக்கிரமேஷ் (31) என்பவருடையது என்பது உறுதியானது. பிறகு சம்பந்தப்பட்ட இசக்கிரமேஷை ஏர்வாடி ஸ்டேஷனுக்கு வரவழைத்து, சப்-இன்ஸ்பெக்டர் சுடலைகண்ணு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை ஒப்படைத்தார்.
இந்த தகவல் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு போனது.. உடனே அல்போன்ஸை நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டி, பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார். இப்போது அல்போன்ஸுக்கு நெல்லை மாவட்டத்தில் பாராட்டும், வாழ்த்தும் குவிந்து வருகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications