Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்யாணமான கயல்விழி மீது காதல்.. திருநெல்வேலியில் 7 சவரன் நகையை விடுங்க, வில்லங்கமான சாமியாரை பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கோயிலுக்கு சென்ற மலர்விழியை காணவில்லை.. எங்கே மாயமானார் என்றும் தெரியவில்லை.. இதுகுறித்து பெற்றோர் போலீசில் புகார் தந்திருந்தனர்.. இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், கிட்டத்தட்ட 8 மாதம் கழித்து, இதற்கு விடை கிடைத்துள்ளது.. இந்த சம்பவம் திருநெல்வேலியில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்துள்ளது மாடன்பிள்ளை தர்மம் என்ற கிராம்.. இங்கு வசித்து வருபவர் சிவலிங்கதுரை.. இவரது மகள் கயல்விழி.. 28 வயதாகிறது.

Thirunelveli 7 sovereign gold kayalvizhi 7

திருமணமாகிவிட்டது.. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தன்னுடைய அம்மா வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.. கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி கோவிலுக்கு போவதாக சொல்லிவிட்டு, வீட்டிலிருந்து கிளம்பி சென்றுள்ளார் கயல்விழி.. ஆனால் அதற்கு பிறகு வீட்டுக்கு வரவில்லை.

மாயமான கயல்விழி

இதனால் பதறிப்போன பெற்றோர் பல்வேறு இடங்களில் கயல்விழியை தேடிப்பார்த்தனர்.. எங்கேயுமே கயல்விழி கிடைக்கவில்லை.. இதனால் மாயமான கயல்விழியை தேடி கண்டுபிடித்து தரும்படி, பழவூர் போலீசில் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து, தேடி வந்தனர்..

அப்போது, அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சிவசாமி என்ற சாமியார், கயல்விழியை காரில் அழைத்து சென்றது தெரியவந்தது.. கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் இந்த சிவசாமி.

சாமியார் சிவசாமி யார்

இதையடுத்து, சிவசாமியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான், கயல்விழியின் 7 பவுன் நகைக்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துதும், கயல்விழியின் சடலத்தை சேரன் மகாதேவியில் 80 அடி அகல கால்வாயில் வீசியதும் தெரியவந்தது..

சாமியாரின் இந்த வாக்குமூலத்தையடுத்து, கால்வாயிலிருந்து கயல்விழியின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன.. தற்போது கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.

கயல்விழி மீது காதல்

அதாவது, கயல்விழி முதுகலை பட்டதாரி ஆவார்.. கடந்த 2022ல், பெங்களூருவில் வேலை பார்க்கும் இளைஞருடன் திருமணமாகியிருக்கிறது.. ஆனால், கடந்த வருடம் பிப்ரவரி மாதமே கணவரை விட்டு பிரிந்து வந்துவிட்டார். எனினும் சில நாட்களிலேயே மீண்டும் கணவருடன் சேர விரும்பினார்.. கணவருடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கயல்விழி பல கோவில்களுக்கு சென்று வேண்டி வந்தார்.

அத்துடன், தன்னுடைய ஃபேஸ்புக்கில், "கணவரை சேர்த்து வைப்பதற்கு நல்ல மாந்திரீகம் செய்ய தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா" என்று கேட்டு போஸ்ட் பதிவிட்டுள்ளார்.

இந்த போஸ்ட்டை தூத்துக்குடியை சேர்ந்த மாயாண்டி ராஜா பார்த்துவிட்டு, கணவரை பிரிந்துள்ள கயல்விழியை தன் வலையில் சிக்க வைக்க முயன்றார்.. இதற்காக காதல் வலையை வீசினார்.. ஆனால், அந்த காதலை கயல்விழி ஏற்கவில்லை..

மாமா, மச்சான்

இதற்கு பிறகுதான், தன்னுடைய மாமா சிவசாமிக்கு மாந்திரீகம் தெரியும் என்று சொல்லி அழைத்துச் சென்றுள்ளார்.. காதலில் கயல்விழி விழாததால், பணத்தையாவது அவரிடமிருந்து பறிக்கலாம் என்று மாயாணடி ராஜா திட்டமிட்டார். இந்த திட்டத்தை மாமா சிவசாமியும் ஏற்றுக் கொண்டார்.

இறுதியில் கணவரை சேர்த்து வைப்பதாக சொல்லியே, கயல்விழியிடம் மொத்தம் ரூ.5 லட்சம் வரை இருவரும் பறித்துள்ளனர்.. 5 லட்சம் செலவு செய்தபிறகுதான் இருவரும் மோசடி பேர்வழிகள் என்பது கயல்விழிக்கு தெரியவந்துள்ளது.. இதனால் தன்னுடைய பணத்தை தரும்படி கயல்விழி அவர்களிடம் கேட்டு வந்துள்ளார்.

8 மாதம் கழித்து விடை

சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி கயல்விழியை சுசீந்திரத்துக்கு வரவழைத்த சிவசாமியும், மாயாண்டி ராஜாவும், கண்ணன், சிவனேஸ்வரி என்ற 2 நண்பர்களை அழைத்து கொண்டு சென்றுள்ளனர்..

4 பேரும் சேர்ந்து கயல்விழியின் கழுத்தை நெரித்து கொன்று, கழுத்திலிருந்த 7 பவுன் நகைகளை பறித்துள்ளனர். பிறகு சடலத்தை கங்கணாகுளம் அருகே மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் உடலை வீசிவிட்டு சென்றுவிட்டார்களாம். இவ்வளவும் வாக்குமூலமாக தந்ததையடுத்து,4 பேரையும் சிறையில் தள்ளியிருக்கிறார்கள்.

8 மாதம் கழித்து, பெண்ணின் கொலையில் நடந்த திருப்பம் திருநெல்வேலியில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+