• search
திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அந்தரங்கம்".. ஜன்னல் ஓரத்தில் ராபின்சன்.. நைட் நேரத்தில் அக்கப்போர்.. இப்ப சார் "மாமியார்" வீட்டில்

Google Oneindia Tamil News

நெல்லை: வசதியானவர்கள் வசிக்கும் ஒரு காலனியில், இரவு நேரத்தில் சுற்றி சுற்றி வருவாராம் பால் ராபின்சன்.. யார் இவர்? இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

நெல்லை பாளையங்கோட்டை ராஜேந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பால் ராபின்சன்.. பெருமாள்புரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஒரு காலனி உள்ளது.. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன.. இந்த காலனிக்குள் அடிக்கடி புகுந்துவிடுவாராம் ராபின்சன்..

இரவு நேரமாகிவிட்டால், ஒவ்வொரு வீட்டின் சுவர் ஏறி குதித்து, அந்த வீட்டின் ஜன்னல் பக்கம் நின்று கொள்வாராம்.. பெண்கள் ரூமுக்குள் டிரஸ் மாற்ற வரும்போது, அவர்களை மறைந்திருந்து வீடியோ எடுத்துக் கொள்வார்.. இவருக்கு வேலையே இதுதானாம்.

பெயில் ஆக்கிருவேன்.. நள்ளிரவில் ஆபாச மெசோஜ்! மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! தொக்காய் சிக்கிய விஜி! பெயில் ஆக்கிருவேன்.. நள்ளிரவில் ஆபாச மெசோஜ்! மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! தொக்காய் சிக்கிய விஜி!

 நைட் டியூட்டி

நைட் டியூட்டி

இதற்காக அன்றைய தினம் எந்த வீட்டுக்கு செல்வது என்று பகலில் வந்து நோட்டமிட்டு செல்வாராம்.. இது தெரியாத அந்த காலனி மக்களோ, திருடர்கள் நடமாட்டம் இருப்பதாக மட்டும் சந்தேகப்பட்டுள்ளனர்.. ஆனால், ராபின்சன் பற்றி எதுவுமே தெரியவில்லை.. சம்பவத்தன்று நைட் இப்படித்தான், ராபின்சன் டியூட்டிக்கு கிளம்பினார்.. ஒரு பெண்ணின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து, வசதியாக ஜன்னல் பக்கமும் போய் நின்றுவிட்டார்.. அந்த வீட்டு பெண்ணையும் வீடியோ எடுத்துவிட்டார்.. ஆனால், இதை அந்த பெண் பார்த்துவிட்டார்..

 செடிகள் - பூங்கா

செடிகள் - பூங்கா

இதனால் அதிர்ந்து போன பெண், கத்தி கூச்சலிடவும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக திரண்டுவிட்டனர்.. ஆனால், அதற்குள் சுவர் ஏறி குதித்த ராபின்சன், பக்கத்தில் இருந்து பார்க் ஒன்றில் மறைந்து கொண்டார்... காலனி முழுக்க தேடியும் ராபின்சன் கிடைக்காததால், அருகில் இருக்கும் பூங்காவில்தான் இருப்பார் என்று நினைத்து பூங்காவை ரவுண்டு கட்டிவிட்டனர்.. அங்கே செடிகளுக்குள் பதுங்கி கொண்டிருந்த ராபின்சனை வளைத்து பிடித்து, ஸ்டேஷனிலும் கொண்டு போய் ஒப்படைத்தனர்.

போட்டோக்கள்

போட்டோக்கள்

இதற்கு பிறகு போலீசார் விசாரணயை துவக்கினர்.. அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதித்தனர்.. அப்போதுதான், போலீசாருக்கு மட்டுமல்ல, அந்த காலனி மக்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.. இன்று ஒருநாள் மட்டும்தான் இப்படி நடப்பதாக நினைத்து கொண்டிருந்தவர்களுக்கு, ஒவ்வொரு வீட்டு பெண்களையும் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்கள்.. அந்த வீடியோ மற்றும் போட்டோக்களை வைத்து பார்க்கும்போது, பல காலம் இந்த காலனியையே சுற்றி சுற்றி வந்தவர் என்பது உறுதியானது.

 ஆபாச செயல்கள்

ஆபாச செயல்கள்

அந்த வீடியோ காட்சிகளை வைத்தும், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரிலும், பிறருக்கு தொல்லை தரும் வகையில் ஆபாச செயல்களை புரிதல், ஆயுதங்களை பயன்படுத்தி ஒருவரை தாக்குதல், ஒருவரின் அந்தரங்க பகுதியை அவருக்குத் தெரியாமல் படம் எடுத்தது அதை வெளியிடுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் போலீசார். இந்த பெருமாள்புரம் காலனியை பொறுத்தவரை அரசு ஊழியர்களும், மேல்தட்டு மக்களும், வயதானவர்களும் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.. மேலும், தனியாக வசிக்கும் பெண்களையும் குறி வைத்துள்ளார் ராபின்சன்.

அந்தரங்கம்

அந்தரங்கம்

இருட்டு நேரத்தில் வந்தால், யாரும் தெரிய வாய்ப்பில்லை என்று முடிவு செய்து வந்துள்ளார்... இத்தனை நாளும் எடுத்த அந்த அந்தரங்க வீடியோக்களை, பத்திரமாக செல்போனில் சேமித்திருக்கிறார்.. எனினும், இவர் இப்படி ஆபாசவீடியோ மட்டும்தான் எடுக்க காலனிக்குள் சென்றாரா? அல்லது பணம், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டாரா? வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
thirunelveli man who took pornographic pictures women alone at home and arrested ஆபாசமாக போட்டோ, வீடியோ எடுத்த நெல்லை இளைஞர் கைதானார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X