நெல்லை பயணிகளுக்கும் வந்தாச்சு சூப்பர் வசதி.. பஸ்களில் கண்டக்டருடன் சில்லறைக்கு மல்லு கட்ட வேண்டாம்
நெல்லை: நெல்லை அரசு பேருந்துகளில் இனி கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் டிக்கெட்டுகளுக்கான கட்டணம் செலுத்தலாம் என்று திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக மண்டலம் தெரிவித்துள்ளது. டிக்கெட் எடுக்கும் போது சில்லறை இல்லையென்ற கவலையின்றி நேரடியாக டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுக்கலாம் எனக் கொண்டு வரப்பட்டு இருக்கும் வசதி பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அரசு பேருந்துகளில் ஜிபே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுக்கும் வசதிகள் அறிமுகம் செய்யபட்டு வருகின்றன. சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் எடுக்க சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு வசதியும் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த டிக்கெட் மூலம் மெட்ரோ, பேருந்துகளில் டிக்கெட் எடுக்க முடியும். பயணிகள் நடத்துநரிடம் டிக்கெட் எடுக்கும் போது ஏற்படும் சில்லறை கொடுக்கல் வாங்கலில் உள்ள சிரமங்கள் தவிர்க்கப்படும் என்பதால் பயணிகள் மத்தியில் இந்த டிஜிட்டல் வசதிக்கு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

ஜி பே, போன் பே
நடத்துனர்களிடம் இதற்காக கையடக்க கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் மூலமாகவும், கார்டு மூலமாகவும் யுபிஐ மூலம் ஸ்கேன் செய்தும் டிக்கெட் எடுக்கலாம். தற்போது தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் இந்த வசதி அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழக மண்டலங்களில் இந்த சேவையை விரிவுபடுத்த போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், நெல்லையில் தற்போது ஜி பே, போன் பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் கூறியிருப்பதாவது:- "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி, பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக, பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணமில்லா பணப்பரிமாற்றம் செய்து பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் முறை நடைமுறைபடுத்தியுள்ளது.
பயணிகள் மகிழ்ச்சி
டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை ஸ்வைப் செய்தோ அல்லது கியூ.ஆர் கோடு ஸ்கேன் செய்தோ அல்லது ஜி.பே போன் பே போன்ற பணப் பரிவர்த்தனை செய்தோ பணப்பரிமாற்றம் செய்து பேருந்தில் நடத்துனரிடம் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்து பயணிகள் பயணச்சீட்டு பெற்று பயன்பெற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை போக்குவரத்து மண்டலத்திற்கு கீழ் இயக்கப்படும் பேருந்துகளில் இனி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என்ற அறிவிப்பு நெல்லை பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லைக்கு வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளும் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொது சிரமம் இன்றி இதன் மூலம் பயணிக்க முடியும் என்று பயணிகள் தரப்பில் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications