அடப்பாவி.. பூனையை உயிருடன் தூக்கில் தொங்கவிட்டு.. லைக்குக்காக மடத்தனம் செய்த.. டிக்டாக் சைக்கோ

பூனையை தூக்கிலிட்ட நெல்லை இளைஞர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: ஒரு பாவமும் அறியாத, செல்லமாக வளர்த்த பூனையை பிடித்து உயிருடன் தூக்கில் தொங்கவிட்டு உச்சி குளிர்ந்து மகிழ்ந்துள்ளார் ஒரு இளைஞர்.. இதற்கெல்லாம் காரணம், பலரையும் நடுத்தெருவில் வந்து நிறுத்தி கொண்டிருக்கும் அந்த டிக்டாக்கில் லைக்ஸ்குகளை வாங்குவதற்காகத்தான்.. பூனையை தூக்கில் தொங்க இளைஞர் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

டிக்டாக் மோகத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.. திறமைகளை காட்டுவதற்கான நல்ல செயலி என்றுதான் ஆரம்பத்தில் புகுத்தப்பட்டது. அந்த வகையில் ஏராளமானோரும் ஆடல், பாடல், நடிப்பு என பல்சுவைகளை கொட்டி வருகின்றனர்.. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், இது எல்லை மீறிவிட்டது.

 tik tok: nellai young man hanged cat for tiktok video

ஆபாசம், அருவெறுப்பு, கொடூரம், வன்மம் என கட்டுக்கடங்காமல் போய்விட்டது.. லைக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ பெண்களின் வாழ்வு நாசமாகிவிட்டது.. கொலைகளும் நடந்துள்ளன... குடும்பங்களும் பிரிந்துள்ளன.

தற்போது ஒரு இளைஞர் செய்த காரியம் அதிர்ச்சியை தருகிறது.. நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்த செட்டிகுளத்தை சேர்ந்தவர் தங்கராஜ்.. இவரது அப்பா மாட்டு பண்ணை வைத்துள்ளார்.. அவருக்கு உதவியாக தங்கராஜ் இருந்து வருகிறார்.

எந்நேரமும் மாடுகளுடன் இருப்பதால், அதனுடன் சேர்ந்து நிறைய டிக்டாக் வீடியோ எடுத்துள்ளார்.. பண்ணை வைத்திருக்கிறார்கள் என்பதால், பெரும்பாலும் சொந்த மாடுகள்தான்.. இவர் வளர்ப்பதால், மாடுகளுடன் டிசைன் டிசைனாக வீடியோ எடுத்து ஷேர் செய்துள்ளார்.. ஆனால் பெரிய அளவில் அந்த வீடியோக்களுக்கு லைக்குகள் விழவில்லை போல தெரிகிறது... இதையடுத்து, நிறைய வடிவேலு காமெடிகளை செய்து பார்த்து டிக்டாக் பதிவிட்டார் தங்காஜ்.. அதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை போல தெரிகிறது.. பீச்சுக்கு போய் படகு மேல் நின்று பலவாறாக வீடியோ எடுத்து போட்டார்.. அதையும் யாரும் மதிக்கவில்லை.

அப்போதுதான் தங்கராஜ் பார்வை தான் செல்லமாக வளர்த்த பூனை மீது சென்றது.. இவர்தான் இந்த பூனையை ரொம்ப நாட்களாக வளர்த்து வந்துள்ளார்.. இந்த பூனையை உயிரோடு தூக்கில் தொங்க விட்டு, அதனை டிக்டாக்கில் வீடியோ எடுத்து பதிவிட்டதும், ஏகப்பட்ட லைக்குகள் வந்து விழுந்துள்ளது.

இந்த வீடியோ வைரலானதையடுத்து, நம் போலீசாரின் கண்களுக்கு பட்டுள்ளது.. உடனடியாக பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது தங்கராஜை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். லைக்குகளுக்காக பூனையை தூக்கில் தொங்க விட்ட தங்கராஜ் கொடூரமானவர் என்றால், இதற்கு லைக்குகளை போட்ட அத்தனை பேரும் கொடிய மிருகங்கள் என்றே சொல்ல தோன்றுகிறது.. அவர்களையும் பிடித்து உள்ளே போட்டால்தான் இந்த குரூரமும், வன்மமும் குறையும்!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+