உமா மகேஸ்வரியோடு கொல்லப்பட்ட பணிப் பெண்.. 3 குழந்தைகளின் தாய்.. கடைசி வரை தடுத்துப் போராடிய தீரம்!
Recommended Video
திருநெல்வேலி: திருநெல்வேலியின் முதல் பெண் மேயர் உமா மகேஸ்வரியை கும்பல் படுகொலை செய்தபோது அவர்களைத் தடுக்க முயன்று போராடியுள்ளார் 30 வயதான பணிப்பெண் மாரி. அதில் சிக்கி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. திமுகவை சேர்ந்த இவர் நெல்லை அருகேயுள்ள ரெட்டியார் பட்டியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் அவர், தனது கணவருடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த ஒரு மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை சரமாரியாக வெட்டினர்.
அப்போது வீட்டில் இருந்த பணிப் பெண் மாரி இதைப் பார்த்து அலறினார். அய்யய்யோ என்று குரல் எழுப்பியபடி கொலையாளிகளை தடுக்க ஓடி வந்தார். ஆனால் அவர்கள் இரக்கமே இல்லாமல் மாரியையும் சரமாரியாக வெட்டினர். இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உமாவையும், அவரது கணவரையும் வெட்டாமல் தடுக்க முயன்று போராடியுள்ளார் மாரி. பரிதாபமாக அவரும் இதில் உயிரிழந்தார்.
பணிப்பெண் மாரிக்கு வயது 30. இவர் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியில் வசித்து வந்தார். கணவரை இழந்த இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications