சுபாஷினி கிளப்பிய புயல்! நானும் கவினும் நிஜமா லவ் பண்ணோம்.. இதான் நடந்தது.. விட்ருங்க ப்ளீஸ்
சென்னை: "கவினுக்கும் எனக்கு என்ன உறவென்று யாருக்கும் தெரியாது" என்று நெல்லை கவின் கொலை குறித்து சம்பந்தப்பட்ட இளம்பெண் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். எங்களைப் பற்றி யாரும் இனி தவறாக பேச வேண்டாம், என்னுடைய பெற்றோர்களுக்கு தண்டனை கொடுக்க நினைப்பது தவறு, என்னுடைய அப்பாவை விட்டுவிடுங்கள் என்று சுபாஷினி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்
சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், சுர்ஜித்தின் அப்பா சரவணன், நேற்றைய தினம் கைதானார்.. அவரது அம்மா கிருஷ்ணகுமாரி இன்னமும் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது.. இந்நிலையில், சுபாஷினி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..

உண்மையா லவ்
அதில், "நானும் கவினும் உண்மையாக லவ் பண்ணோம்.. கொஞ்சம் செட்டிலாக டைம் தேவைப்பட்டது. மே30ம் தேதி, கவினும், சுர்ஜித்தும் பேசிக்கொண்டனர். அப்போது சுர்ஜித் என்னுடைய லவ் மேட்டரை வீட்டில் சொல்லிவிட்டான். தொடர்ந்து, அப்பா என்னிடம் 'நீங்க 2 பேரும் லவ் பண்றீங்களா?"ன்னு கேட்டார்..
கவின் 6 மாதம் டைம் கேட்டிருந்ததால் நான் காதலிக்கவில்லை என சொல்லிவிட்டேன். அதற்குள்ளேயே இப்படி ஆகிவிட்டது, அவங்க 2 பேருக்கும் (கவின் - சுர்ஜித்) இடையே என்ன பேசிக்கிட்டாங்க என்று எனக்கு தெளிவாக தெரியல.. சுர்ஜித் கவினுக்கு போன் பண்ணி, நீங்கள் (கவின்) பொண்ணு கேட்க வாங்க.. இவளுடைய மேரேஜ் முடித்தால்தான் என்னுடைய Proffession-ஐ பார்க்க முடியும்' என சொல்லியிருக்கிறான் என்பது எனக்கு கண்டிப்பா தெரியும்.
தாத்தாவுக்கு சிகிச்சை
27ம் தேதியன்று கவின் வருவது எனக்கு தெரியாது. நான் 28ம் தேதி சாயகாலம்வர சொல்லியிருந்தேன். அவங்க தாத்தாவுக்கு தலைக்கு பிரச்சனை இருந்ததால் ரூம் பாத்துட்டு அட்மிட் பண்ணனும் என்று யோசித்திருந்தேன்.
27ம் தேதி மதியம் மங்கம்மாள் சாலைக்கு வந்த பிறகுதான் அவங்க வந்துட்டாங்க என்பதே எனக்கு தெரியும். உடனே நான் அவங்களை IP-க்கு (உள்நோயாளி பிரிவுக்கு) கூட்டிட்டு போயிட்டேன்.. கவின் உள்ளே வந்தான், ஆனால் நான் அவனுடைய அம்மா, மாமாகிட்ட மட்டும்தான் பேசினேன். நான் பேசிக்கொண்டிருக்கும்போதே கவின் வெளியே சென்றுவிட்டான்.
கவினின் அம்மாவும், மாமாவும் அங்கிருந்து கிளம்பும்போதுதான், கவின் எங்கே என்றே நாங்கள் யோசித்தோம். நான் ட்ரீட்மென்ட் பற்றி அவர்களிடம் விளக்கி கொண்டிருந்தேன்..
விட்ருங்க விட்ருங்க
அவனுடைய அம்மாவும் போன் செய்து கவின் எடுக்கல.. நான் போன் செய்தும், கவின் எடுக்கவில்லை... அதுக்குள்ள அவனின் அம்மா பசிக்குதுன்னு சொன்னதும், "சரி நீங்க போய் சாப்பிடுங்க, அவனை நான் வர சொல்றேன்"னு சொன்னேன்.. அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு...
இதனால் தேவையில்லாமல் யாரும் இஷ்டத்துக்கும் வதந்தியை பரப்ப வேண்டாம், உங்களுக்கு தோன்றுவதையெல்லாம் பேசாதீங்க.. என்னுடைய அப்பா , அம்மாவுக்கு இதில் எந்த சம்பந்தமும் கிடையாது, அவர்களுக்கு தெரியாது. இதை இத்துடன் விட்டுருங்க, விட்டுருங்க... அவ்வளவுதான்" என்று தெரிவித்துள்ளார்.
வீடியோ பரபரப்பு
ஏற்கனவே சுர்ஜித்தின் பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் என்று , கவினின் பெற்றோர் கொந்தளித்து வருகிறார்கள்.. அவர்களை கைது செய்யும்வரை கவினின் சடலத்தை வாங்கி கொள்ள மாட்டோம் என்று போராடியும் வருகின்றனர்.. நேற்றைய தினம், சுர்ஜித்தின் அப்பா கைதான நிலையில், சுர்ஜித்தின் அம்மாவையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தபடியே உள்ளது..
இந்நிலையில், தன்னுடைய அம்மா, அம்மாவுக்கும், இந்த கொலைக்கும் எந்த தொடர்புமில்லை என்று சுபாஷினி பேசியிருக்கும் இந்த வீடியோ இணையத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications