Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேசிய கட்சியின் அலுவலகம் மீதே தாக்குதல்.. ஜாதிய தீண்டாமை வேதனை அளிக்கிறது.. எடப்பாடி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் சிபிஐஎம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி என்று தெரிவித்துள்ளார்.

நெல்லை பெருமாள்புரத்தை சேர்ந்தவர் உதய தாட்சாயினி (வயது 23). இவரும் பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) என்பவரும் சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் குடும்பத்தில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

nellai tirunelveli cpim marriage edappadi palaniswami

எனினும் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் உள்ள லெனின் சிலை முன்பு போலீஸ் பாதுகாப்புடன் சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இதை அறிந்ததும் பெண் வீட்டினர் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் குவிந்தனர். அப்போது மணப்பெண்ணை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் பெண் வர மறுத்ததால், கட்சி நிர்வாகிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆத்திரமடைந்த பெண் வீட்டினர் அந்த கட்சியின் அலுவலக கண்ணாடிகளையும், நாற்காலிகளையும் உடைத்ததுடன், கட்சி நிர்வாகிகளையும் தாக்கினர்.

இந்த நிலையில் கட்சி அலுவலகத்தை சூறையாடிய தந்தை முருகவேல், தாய் சரஸ்வதி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம். தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.

சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது. நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+