திருநெல்வேலி டூ கன்னியாகுமரி.. டீச்சரை காரில் ஏற்றி, ரூட்டை மாற்றிய "காதல்" இளைஞர்.. ஆடிப்போன நெல்லை
நெல்லை : பள்ளி மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் பாலியல் தொல்லைகள் சமீபகாலமாகவே அதிகரித்து கொண்டிருக்கும்நிலையில், பள்ளி ஆசிரியர்களும் இதே போன்ற பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிவிடுகிறார்கள். இதோ நெல்லையில் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் கட்டாரங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ... 38 வயதாகிறது.. அதேபகுதியில் செல்போன் ரிப்பேர் செய்யும் கடையை வைத்து நடத்தி வருகிறார்.. இவரது கடைக்கு பக்கத்திலேயே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 24 வயது ஆசிரியை பணியாற்றி வருகிறார்.

கடையும், ஸ்கூலும் அருகருகில் இருப்பதால், இந்த ஆசிரியைக்கும், ராஜூவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது... ஆசிரியையும் ராஜூவுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
செல்போன் கடைக்காரர்
இந்நிலையில், தச்சநல்லூர் பகுதியிலுள்ள வேறொரு தனியார் பள்ளிக்கு டிரான்ஸ்பர் ஆகி சென்றுவிட்டார் ஆசிரியை.. இதனால் ராஜூவுடன் பேசுவதை குறைத்துள்ளார்... இதனால் ராஜூ, ஆசிரியையிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வந்திருக்கிறார்.. தன்னை துரத்தி துரத்தி பேச முயற்சிப்பதை அறிந்த ஆசிரியை, உடனே ராஜூவுடன் பேசுவதை தவிர்த்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, பஸ்ஸுக்காக, பஸ் ஸ்டாண்டில் காத்துக்கொண்டிருந்தார்.. அப்போது அங்கு காரில் வந்த ராஜூ, ஆசிரியையிடம், நானும் வீட்டுக்குத்தான் போகிறேன், போகிற வழியில் இறக்கிவிட்டுடறேன் என்று சொல்லி காரில் வருமாறும் அழைத்துள்ளார்.. ஆனால், ஆசிரியை காரில் ஏற முடியாது என்றும், பஸ்ஸிலேயே சென்றுவிடுவதாகவும் கூறியிருக்கிறார்..
பஸ் ஸ்டாண்டில் தொல்லை
தொடர்ந்து ராஜூ கட்டாயப்படுத்திக் கொண்டேயிருந்ததால், காரில் ஏறியிருக்கிறார் ஆசிரியை. ஆனால், கார், நேராக வீட்டிற்கு செல்லாமல் கன்னியாகுமரியை நோக்கி சென்றிருக்கிறது.. திடீரென ரூட் மாறி கார் செல்வதை கண்ட ஆசிரியை பதறிப்போய், வீட்டிற்கு செல்லாமல் என்னை எங்கே அழைத்துச் செல்கிறாய்? என்று கேட்டுள்ளார்..
இதற்கு ராஜூ சரியாக பதிலளிக்கவில்லையாம். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியிருக்கிறது.. அப்போது ராஜூ, ஓடும் காரிலேயே ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரே இரவில் தூக்கிய போலீஸ்
பாளை டக்கம்மாள்புரம் அருகே வந்து கொண்டிருந்தபோது, கடுமையாக போராடி, ஒருவழியாக ராஜூவின் பிடியிலிருந்து அந்த ஆசிரியை தப்பித்து, போலீசுக்கு சென்றார். நடந்த சம்பவம் குறித்தும் புகார் தந்தார்.. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகர போலீசார், ராஜூவை பிடித்து தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், பெண்ணை கடத்துதல், பாலியல் சீண்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, ராஜூவையும் கைதுசெய்தனர். பிறகு அவரிடம் விசாரணையும் நடந்தது..
ராஜூ, டீச்சரை தீவிரமாக காலித்து வந்தாராம்.. ஆனால் அவருடைய காதலை டீச்சர் ஏற்க மறுத்ததால் , காரில் கடத்த முயன்றதாக கூறினார்.. அத்துடன் ஓடும் காரில் பாலியல் சீண்டல் தந்ததாகவும் ஒப்புக் கொண்டார்..
டீச்சர்களுக்கும் பாதுகாப்பில்லை
டீச்சரை காரில் கடத்தி கொண்டுபோன நபரை, போலீசார் சற்று நேரத்தில் கைது செய்திருக்கிறார்கள்.. இந்த சம்பவம் நெல்லை, தச்சநல்லூர் பகுதியில் பரபரப்பை தந்துவருகிறது.
தஞ்சாவூரில் சில மாதங்களுக்கு முன்பு, காதல் டார்ச்சரில் ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.. காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த ரமணி என்ற ஆசிரியை, பள்ளியிலேயே புகுந்து அரிவாளால் வெட்டியும், குத்தியும் கொலை செய்திருந்தார் மதன் என்ற இளைஞர்.. ஏற்கனவே பள்ளி மாணவிகளுக்கு, ஆசிரியர்களால் நாளுக்கு நாள் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும்நிலையில், ஆசிரியைகளுக்கும் பாலியல் சீண்டல்கள் அதிகரித்திருப்பது, பொதுமக்களுக்கு பெருத்த கவலையை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications