தமிழ்நாட்டில் என்னங்க இது? 18 வயசுகூட ஆகல.. திருநெல்வேலியில் "தாயாகும்" சிறுமிகள்.. நெளியுது நெல்லை
சென்னை: தமிழகத்திலேயே, நெல்லை மாவட்டத்தில்தான், 18 வயதுக்கும் குறைவான பெண் சிறார்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக ரிப்போர்ட் ஒன்று வெளியாகி, பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
குழந்தை பருவத்திலேயே, பெண்களுக்கு கல்யாணம் செய்து வைக்கும் போக்கு நம்முடைய தமிழகத்தில் ஆங்காங்கே இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. இதனால், அவர்களது சமூக வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களது அடிப்படை உடலியல் ஆரோக்கியமும் சேர்ந்து கெட்டுப் போகின்றன.

அதுமட்டுமல்ல, ஒரு குழந்தையே, இன்னொரு குழந்தையை பெற்றெடுப்பதால், பிறக்கும் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளாக பிறந்துவிடுகின்றன.. இதனால், கருவுற்ற குழந்தையும் பாதிப்புகளுக்கு உண்டாகும் நிலைமையும் ஏற்பட்டுவிடுகின்றன. குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் வலுவாக இருந்தும்கூட, குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
பெண் சிசு: குழந்தை திருமணம், பெண்சிசு கொலை அதிகமாக நடைபெறும் விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி மாவட்டங்களில் தமிழக அரசும் மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது.. எனினும், முற்றிலுமாக குழந்தை திருமணத்தையும், 18 வயதுக்கு முன்பேயே பெண் குழந்தைகள் தாயாவதையும் தடுக்க முடியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதில், நெல்லை மாவட்டத்தில் 2021 ஜனவரி தொடங்கி 2023 அக்டோபர் மாதம் வரை 34 மாதங்களில் 18 வயதுக்கும் குறைவான பெண் சிறார்கள் 1448 பேருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.
மேலப்பாளையம்: அதிலும், மேலப்பாளையம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மட்டும், அதிகபட்சமாக 88 சிறுமிகள் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்களாம். மானுர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 44 பெண் குழந்தைகளும், வன்னி கோனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 43 பெண் குழந்தைகளும், குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.. இதற்கு 2 விதமான காரணங்களையும் சொல்கிறார்.. முதலாவதாக, பள்ளி கல்லூரிகளில் இடைநிற்றல் என்பதே மிகபெரிய காரணமாகிறது.. அடுத்ததாக, 18 வயதிற்கு முன்பே திருமணம் நடத்தப்படுவதும் சிறுவயது குழந்தை பேருக்கு காரணமாக அமைகிறது என்கிறார்.
கல்லூரிகள்: பள்ளி, கல்லூரிகளில் இடைநிற்றல் குறைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு வார கணக்கில் வராத பெண் குழந்தைகள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு விசாரணை செய்யப்படுகிறது என்றும், 18 வயதிற்கு முன் பெற்றோர்களால் திருமணம் நடத்தப்படுவது தடுக்கப்படுகிறது, ஆனால் காதல் திருமணத்தை தடுக்க முடியவில்லை என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் வேதனை தெரிவித்துள்ளார்.
இப்படி ஒரு ரிப்போர்ட் வெளிவந்த உடனேயே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசுக்கு ஒரு யோசனை தெரிவித்துள்ளார். அதில், குழந்தை திருமணத்தின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாலியல் கல்வியை அறிமுகம் செய்தல், குழந்தைத் திருமணம், குழந்தை மகப்பேறு ஆகியவை குறித்த பாடங்களை பள்ளிக் கல்வியில் அறிமுகம் செய்தல் ஆகியவற்றின் மூலமே குழந்தைத் திருமணங்களையும், குழந்தை மகப்பேறுகளையும் தடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.
குழந்தை திருமணம்: அரசியல் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஒருபக்கம் இருந்தாலும், குற்றம் நடப்பதற்கான காரணத்தையும் நாம் அனைவருமே சேர்ந்து கண்டறிய வேண்டி உள்ளது.
முக்கியமாக, குழந்தை திருமணத்திற்கு பிரதான காரணமாக சொல்லப்படும் வறுமையை ஒழிக்க வேண்டியிருக்கிறது... முழுமையான கல்வியறிவை அடித்தட்டு மக்களுக்கு தர வேண்டியிருக்கிறது.. மதவாதம், சாதியவாதத்தையும் சேர்த்து ஒழிக்க வேண்டியிருக்கிறது... இவைகளையெல்லாம் வேரூடன் கிள்ளியெறியாமல், குழந்தை திருமணங்களையும், 18 வயதுக்கு முன்பே தாயாகும் துயரத்தையும் முற்றிலும் ஒழிக்க முடியாது என்பதே வேதனையான உண்மை.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications