நெல்லை சீமையே அடியோடு மாறப்போகுது.. வெளியான மாஸ்டர் பிளான் அறிவிப்பு.. இனி ஸ்கை ஸ்கிராப்பர்தான்
திருநெல்வேலி: திருநெல்வேலிக்கு புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடங்கி பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட உள்ளன.
திருநெல்வேலிக்கான மாஸ்டர் பிளான் நேற்று வெளியிடப்பட்டது. திருநெல்வேலியில் செய்யப்பட உள்ள பல்வேறு மாற்றங்கள் தொடர்பான அறிவிப்புகள் இதில் வெளியாகின. அதில் முக்கியமாக திருநெல்வேலி மாஸ்டர் பிளான் 2041 நகரில் 4 புதிய பேருந்து முனையங்கள் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

1. சுத்தமல்லி பேருந்து முனையம்
2. பழையபேட்டை பேருந்து முனையம்
3. தாழையூத்து பேருந்து முனையம்
4. KTC நகர் பேருந்து முனையம்
திருநெல்வேலி சந்திப்பில் மல்டி மாடல் ஹப் அமைக்கப்படும். அதாவது ரயில் நிலையம், மெட்ரோ ஆகியவை திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையில் அமைக்கப்படும் .
திருநெல்வேலி: அதேபோல் திருநெல்வேலியில் வானுயர கட்டிடங்களுக்கும் புதிய அனுமதி வழங்கப்படும். உலகம் முழுக்க பல நாடுகளின் தலைநகரங்களில் வானுயர கட்டிடங்கள் இருக்கும். ஏன் பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள இலங்கையின் தலைநகர் கொழும்பில் கூட வானுயர கட்டிடங்கள் உள்ளன.
இந்தியாவிலும் மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் சில வானுயர கட்டிடங்கள் உள்ளன. ஆனால் சென்னையில் அப்படி பெரிய கட்டிடங்கள் அதிகம் இல்லை. சென்னையில் பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ஐடி பார்க்குகள் இருந்தாலும், இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் கிடைமட்டமாக நீண்டு காணப்படும். அதாவது நீளமாக இருக்குமே தவிர உயரமாக இருக்காது. சென்னையில் உயரமாக இருக்கும் கட்டிடங்களும் கூட பெரும்பாலும் மக்கள் வசிக்கும் அப்பார்ட்மென்டுகள்தான். இந்த நிலையில்தான் சென்னையில் முக்கியமான சாலைகளில் உயரமான கட்டிடங்களை காட்டும் வகையில் எப்.எஸ்.ஐ விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
எப். எஸ். ஐ என்பது Floor a Space Index ஆகும். அதாவது ஒரு நிலப்பரப்பில் எப்படி கட்டிடம் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடும் மதிப்பீடு ஆகும். ஒரு குறிப்பிட்ட நிலத்தில் எவ்வளவு உயரத்திற்கு கட்டிடம் கட்ட வேண்டும், எவ்வளவு floor இருக்க வேண்டும் என்பதை இந்த மதிப்பு குறிக்கும். அதிக Floor a Space Index மதிப்பு இருந்தால், அதிக தளங்களை ஒரு பகுதியில் கட்ட முடியும். அமெரிக்கா, சிங்கப்பூரில் இதன் மதிப்பு 10-20 வரை இருக்கும் என்பதால் அங்கு அதிக உயரத்தில் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இந்தியாவில் இதன் மதிப்பு சராசரியாக 2-3 மட்டுமே உள்ளது.
இந்த நிலையில்தான் சென்னையில் தற்போது இருக்கும் எப்எஸ்ஐ மதிப்பான 3.25 புதிய மதிப்பான 5 ஆக மாற்றப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட சில சாலைகளில் இலவச எப்எஸ்ஐ மதிப்பு 6-8 வரை மாற்றப்பட்டு உள்ளது. இதன் அர்த்தம் தற்போது இருக்கும் கட்டிடங்கள் அதன் உயரத்தை இரண்டு மடங்கு கூட அதிகரிக்க முடியும். அதாவது 6 அடுக்கு கட்டிடங்கள் 12 அடுக்கு கட்டிடமாக உயர்த்த முடியும். சென்னையில் பல முக்கிய சாலைகளில் இந்த புதிய எப்எஸ்ஐ விதிகள் கொண்டு வரப்பட உள்ளதாம்.
இதேபோல் தற்போது நெல்லையில் 1-2 ஆக இருக்கும் எப்எஸ்ஐ மதிப்பு 3 அல்லது 4 என்ற அளவில் மாற்றப்பட உள்ளது.
நெல்லை மாற்றம்: நெல்லையில் கீழே உள்ள முக்கிய காரிடரில் FSI 3 வரை பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
1. திருநெல்வேலி டவுன் முதல் பாளையங்கோட்டை வரை
2. பாளையங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் சாலை வழியாக ஐஆர்டி பாலிடெக்னிக் கல்லூரி
3. பைபாஸ் வழியாக சங்கர்நகர் முதல் எம்ஜிஆர் பேருந்து நிலையம் வரை பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதனால் நெல்லையில் வரும் நாட்களில் உயரமான கட்டிடங்கள் பல வரும் வாய்ப்புகள் உள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications