வளர்மதியை "வளைத்த" ஆபீசர்ஸ்.. திருநெல்வேலி கள்ளக்காதலியிடம் வீழ்ந்த பிரபலங்கள்.. வியந்துருச்சு நெல்லை

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தென்காசி போலீஸ் அதிகாரியிடம், மதுரை ஒத்தக்கடை போலீசார் விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.. இவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வரும்நிலையில், அவர் சம்பந்தமாக சில தகவல்கள் போலீஸ் தரப்பிலிருந்தே வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.

தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயது முருகராஜ். திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சந்திப்பு போலீஸ் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

tirunelveli madurai nellai

சில வருடங்களுக்கு முன்பு, வளர்மதி என்ற பெண் முருகராஜுக்கு பழக்கமாகவும், இவர்களுக்குள் முறையற்ற உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. வளர்மதிக்காகவே, நெல்லையில் வாடகைக்கு வீடு எடுத்து தந்த முருகராஜ், வளர்மதியை பயன்படுத்தி, குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

நிலத்துக்கு பட்டா வாங்கி தருவது, அரசு வேலை வாங்கித்தருவது என லட்சக்கணக்கில் பணம் வாங்கி பலரையும் மோசடி செய்து வந்துள்ளார்.. மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சசிகுமார் என்பவர், புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கி தர வேண்டும் என்பதற்காக வளர்மதியை அணுகி, 10 லட்சம் ரூபாய் தந்துள்ளார்.. ஆனால், கடைசி வரை பட்டாவையும் தரவில்லை, பணத்தையும் தரவில்லை. இதற்கு பிறகுதான், சசிக்குமார் போலீசுக்கு செல்லவும், வசமாக சிக்கி கொண்டார்கள் வளர்மதி - முருகராஜ் ஜோடி.

வளர்மதி: போலீசார் தரப்பில் இதுகுறித்து கூறியதாவது: முருகராஜின் சொந்த ஊரான வீ.கே.புதூர் அருகே கலங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வளர்மதி... சில வருடங்களுக்கு முன்பு, வளர்மதி தன்னுடைய அப்பாவுடன் ஓசூருக்கு குடிபெயர்ந்துள்ளார்.. பிறகுதான், சொந்த ஊருக்கு செல்லும்போது முருகராஜூடன் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.

சொகுசு வாழ்க்கை வாழ 2 பேருமே ஆசைப்பட்டிருக்கிறார்கள்.. எனவே, மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்.. வளர்மதி, தன்னை டிஆர்ஓ என்று பிறரிடம் சொல்லிக் கொள்வார்.. சில சமயம் டாக்டர் என்றும் சொல்லுவார்.. அதேபோல, முருகராஜ் தன்னை இன்ஸ்பெக்டர் என்று சொல்லுவார்.. இப்படியே இருவரும் ஏமாற்றி, கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை பறித்திருக்கிறார்கள்.

வளர்மதி: முக்கியமாக, புகார்களை கொடுக்க தயங்கும், தொழிலதிபர்களை குறிவைத்து இவர்களின் மோசடி வலம்வந்துள்ளது.. என் மனைவி டிஆர்ஓதான், எந்த பிரச்னையும் இல்லாமல் வேலையை முடிச்சு தந்துடுவாங்க என்று முருகராஜ் பேசுவாராம்.. உடனே வளர்மதியும், அந்த நபர்களிடம் டிஆர்ஓ தோரணையில் பேசுவாராம்.

இப்படியே பல லட்சங்களை மோசடி செய்து வந்திருக்கிறார்கள்.. வளர்மதி தன்னுடைய பெயரில் மட்டும் 5க்கும் மேற்பட்ட வங்கிகளில் புதிதாக கணக்கு தொடங்கியிருக்கிறாராம்.. அதில் சில வங்கி கணக்குகளில் முருகராஜ் பெயரை தன்னுடைய கணவர் என்று அதிகாரப்பூர்வமாகவே குறிப்பிட்டுள்ளாராம்.. அதிகாரப்பூர்வமாக கிடைத்த 2 வங்கி கணக்குகளில் மட்டுமே கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இவர்களது வங்கி கணக்கில் சுமார் ரூ.15 கோடிக்கு பணப்பரிவர்த்தனை நடந்திருக்கிறது.

வங்கி கணக்கு: இன்னும் சில வங்கி கணக்குகளும் இருப்பதால் மோசடி தொகை இன்னும் அதிகமாகும்.. இப்போதைக்கு முருகராஜ், வளர்மதி ஆகியோரின் இருவரையும் கைது செய்துள்ளோம்.. அவர்களது அடையாள அட்டைகளை வைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்ய உள்ளோம். அதற்கு பிறகுதான் இவர்கள் 2 பேரும் எவ்வளவு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர் என்ற விபரம் தெரியவரும்" என்கிறார்கள் போலீசார்.

இதனிடையே, வளர்மதியுடன் சேர்ந்து ஏட்டு முருகராஜ், பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா இதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இந்த கள்ளக்காதல் ஜோடி செய்த மோசடி கணக்குகளை இன்று போலீசார் ஆராய உள்ளதாக தெரிகிறது. அதற்கு பிறகுதான், இவர்கள் 30 தொழிலதிபர்களிடம் எவ்வளவு பணத்தை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது தெரியவருமாம்.

இதனிடையே, வளர்மதியின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.. வளர்மதியின் கண்ணாடி மாளிகை, 30 ஏக்கர் தோட்டம், ஏற்காட்டில் உள்ள தோட்டம் அத்தனையும் வளர்மதி முருகராஜ் பெயரில் எழுதி கொடுத்ததாக ஆவணங்கள் கிடைத்துள்ளன. அந்த ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றியிருக்கிறார்கள். இந்த ஆவண்ஙகளின் உண்மை தன்மை குறித்தும் ஆய்வு நடப்பதால், நெல்லை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிஆர்ஓ வளர்மதி: வளர்மதியின் ஒரு வங்கிக்கணக்கில் 8 கோடிக்கும், இன்னொரு வங்கி கணக்கல் ஏழரை கோடிக்கும் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாம்.. அதைத்தவிர, அவரது வேறு வங்கி கணக்குகளையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. இவை அனைத்துமே, 30-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை மிரட்டி பறிக்கப்பட்ட சொத்துக்களாக இருக்கலாம் என்கிறார்கள்.

வளர்மதி தன்னை மாவட்ட வருவாய் அலுவலர், என்பதுடன் டாக்டர்என்றும்கூறி அரசு வேலையில் சேர்ப்பதாக பலரிடம் பணம் பறித்துள்ளார். ஏற்கனவே நெல்லை மாநகர் தொழிலதிபர் புகார் தந்திருந்த நிலையில், மற்றொரு தொழிலதிபரும் வளர்மதி மீது புகார் தந்ததால், நேற்றைய தினம் பெருமாள்புரம் போலீசார் வளர்மதியை மீண்டும் கைது செய்தனர். யார் போன் செய்தாலும், பிஆர்ஓ வளர்மதி என்றுதான் ட்ரூ காலரில் வருகிறதாம். இதில்தான் பலர் ஏமாந்திருக்கலாம் என்கிறார்கள் போலீசார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+