Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேற மாதிரி குஷி.. ஆயன்குளம் அதிசய கிணற்றை மெல்ல எட்டிப்பார்த்து.. யார் பாருங்க திணறும் திருநெல்வேலி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் ஆயன்குளம் அதிசய கிணற்றினை காண, மாவட்ட கலெக்டர் ஸ்பாட்டுக்கே கிளம்பி வந்தார்.. என்ன நடந்தது திசையன்விளையில்??

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது ஆயன்குளம்.. இங்குதான் உள்ளது அந்த அதிசய கிணறு.. எப்போதெல்லாம் பெருமழை பொழிகிறதோ, அப்போல்லாம், இந்த கிணறு பெருமளவுக்கு தண்ணீரை உள்வாங்கும்.. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துவிடும்.

Tirunelveli Wonder Well and Do you know what did Nellai Collector say about Miracle well water absorbing

அதிசய கிணறு: அதாவது, சுமார் 75 அடி ஆழம் கொண்ட இந்த அதிசய கிணறு மழைக்காலங்களில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதனை உள்வாங்கிக் கொண்டு அப்பகுதி மக்களை காப்பாற்றிவிடும்..

நீர் ஆதாரமாக விளங்கிக்கொண்டிருக்கும் இந்த கிணறு, அந்த பகுதியை சுற்றியுள்ள 11 கிணறுகளை நிரப்புகிறது. மேலும், ராதாபுரம் முதல் சாத்தான்குளம் வரை சுமார் 150 கிணறுகள் இதன் மூலம் பயன்பெறும் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த வருடம் இப்படித்தான் பருவமழை கொட்டியது.. அப்போது, உபரி நீர் வினாடிக்கு 3,000 கன அடி இந்த கிணற்றுக்குள் விழுந்தது..

நிரம்பாத கிணறு: ஆனால் தற்போது, பல நாட்களாகவே தண்ணீரை உள்வாங்கியும்கூட, இந்த அதிசயக்கிணறு நிரம்பவே இல்லை.. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் ஆச்சரியப்பட்டனர்.. விவசாயிகள் இடிந்து போனார்கள். இது தொடர்பாக அதிகாரிகளுக்கும் தகவல் தரப்பட்டதையடுத்து, அவர்களும் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், கிணற்றின் அடியில், சுண்ணாம்பு பாறைகள் கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..

இந்த பாறைகள் காரணமாகத்தான், கிணற்றிர் நீர் நிரம்பவில்லை என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமல்ல, இந்த கிணறு வழியாக செல்லும் தண்ணீரானது, சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரையிருக்கும் பகுதிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர காரணமாக இருந்ததும் தெரியவந்தது.

கால்வாய்கள்: எனவே, இதற்கான தடுப்பு பணிகள் ஆரம்பமாகின.. கால்வாயில் இருந்து அதிசய கிணறு வரையில், 2 பக்கமும் தடுப்புச்சுவருடன் கால்வாய் அமைக்கும் வகையில் கான்கிரீட் பலகைகள் அமைக்கப்பட்டிருந்தன.. மேலும், கிணற்றையொட்டி, கட்டுமான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.. அதனால்தான், அதிக வெள்ளம் வந்தபோதிலும் அடைப்பு காரணமாக கிணறு தண்ணீரை உள்வாங்கவில்லை என்று சொல்கிறார்கள்.

அதிசய கிணற்றின் 3 பக்க தடுப்புச்சுவர்களும் வெள்ளத்தில் இடிந்து விழுந்தாலும், கிணற்றுக்குள் கட்டுமான பொருட்களும், கட்டிட இடிபாடுகளும் குவிந்ததாலும், தண்ணீரை உள்வாங்காமல் நின்றுவிட்டது.. இதனால், எப்படியாவது அந்த அதிசய கிணற்றை மீட்டு தாருங்கள் என்று பொதுமக்களும், விவசாயிகளும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்..

வெள்ள நீர்: இதையடுத்து, வெள்ளம் சற்று தணிய துவங்கியதுமே, அதிசய கிணற்றில் தண்ணீர் மெதுவாக உள்வாங்க ஆரம்பித்தது. இதைபார்த்த அப்பகுதியை சேர்ந்த சில விவசாயிகள் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி, அங்கு கிடந்த கட்டுமான பொருட்களையும், இடிபாடுகளையும், கட்டைகளையும் அப்புறப்படுத்தினர்...

Tirunelveli Wonder Well and Do you know what did Nellai Collector say about Miracle well water absorbing

அதிசய கிணற்றை சுத்தம் செய்யும் பணியும் ஆரம்பமானது.. பின்னர், வெள்ளநீர் கால்வாயில் வெள்ளோட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, இந்த தண்ணீர் அதிசய கிணறு மீண்டும் தண்ணீரை உள்வாங்க தொடங்கியது. கிணறு நிரம்பினால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு தீரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கலெக்டர் நம்பிக்கை: இந்நிலையில், நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேரடியாகவே அதிசய கிணற்றை காண கிளம்பி வந்தார்.. சுமார் அரை கிலோ மீட்டர் தூரம், ஆயன்குளம் படுகை அமர்ந்துள்ள இடம்வரை நடந்தே சென்று, கிணற்றுக்கு தண்ணீர் வரும் கால்வாயையும், அவர் பார்வையிட்டார். அப்போது அந்த பகுதி விவசாயிகளிடமும், அந்த பகுதி தலைவர்களிடமும் விவரங்களை கேட்டறிந்தார்..

கனமழை காலங்களில் எந்த பாதிப்பும் வராதவாறு பாதுகாக்கப்படும் என்றும், விரைவில் அந்த கிணறு தூர்வாரப்படும் என்றும் கலெக்டர் உறுதி தந்துவிட்டு போயிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+