என் உயிருக்கு ஆபத்து.. டேஞ்சரில் சீமான், கிருஷ்ணசாமி, திருமா..! பகீர் கிளப்பும் தமமுக ஜான் பாண்டியன்
திருநெல்வேலி: தமிழகத்தில் பெயர் சொல்வதற்காக அரசியல் தலைவர்களை கொலை செய்யும் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், தனது உயிருக்கும், சீமான், கிருஷ்ணசாமி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலையால் பரபரப்பில் இருக்கிறது தமிழ்நாடு. இந்நிலையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 4 அரசியல் கொலைகள் அரங்கேறி இருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான நெல்லை தீபக் ராஜா, சேலம் அதிமுக நிர்வாகியான சண்முகம், மதுரையில் நாம் தமிழர் நிர்வாகி பாலசுப்பிரமணியன் என தற்போது வரை தமிழகத்தை இரு மாதங்களில் 5 அரசியல் கொலைகள் அரங்கேறியுள்ளது.
இதனையடுத்து திமுக ஆட்சியில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை என எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தனது உயிருக்கும், சீமான், கிருஷ்ணசாமி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன்,"தற்போது தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
தற்போது கொலையாளிகளின் எண்ணம் பெரிய தலைவர்களை கொலை செய்து விட்டு பெயர் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். இதைத் தவிர வேறு எண்ணம் அவர்களுக்கு கிடையாது. இந்த நிலை தான் தற்போது தமிழகத்தில் அதிகமாக நிலவுகிறது. இவரை கொலை செய்து விட்டோம் என பெயர் வாங்கி விட வேண்டும் என்ற குறுகிய கண்ணோட்டத்தோடு சிலர் தமிழகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை கண்காணித்து தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் என தமிழக அரசை நான் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மிரட்டல் இருப்பதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருக்கிறேன். தற்போதும் புகார் அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறேன். உளவுத் துறை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் எனக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று அவர்கள் என்னிடம் சொல்லவில்லை. அவர்கள் தான் அதனை தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் எனது உயிருக்கும் தற்போது ஆபத்து இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கட்சி தலைவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. எனவே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு, எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலைகளுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். வேலை வாய்ப்பு இல்லாததும், கஞ்சாவும் தான் கூலிப் படைக்கு காரணமாக இருக்கிறது. எனவே இந்த விவகாரங்களிலும் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications