திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டிலேயே பாஜகவை வலிமையாக எதிர்ப்பதில் டாப் முதல்வர் ஸ்டாலின்! தமிழக காங்கிரஸ் புகழாரம்!

Google Oneindia Tamil News

நெல்லை: இந்தியாவிலேயே பிரதமர் மோடியையும், பாஜகவையும் வலிமையாக எதிர்ப்பதில் முதன்மையான முதல்வர் ஸ்டாலின் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி புகழாரம் சூட்டியுள்ளார்.

Recommended Video

    பாஜகவை எதிர்ப்பதில் முதன்மையானவர் ஸ்டாலின்தான் - கே.எஸ்.அழகிரி

    மதச்சார்பற்ற கொள்கைகளில் ஸ்டாலின் மிகவும் உறுதிமிக்கவர் என்றும் அவர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

    இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இப்போதிருந்தே திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை காங்கிரஸ் நிர்வாகிகள் புகழத் தொடங்கியுள்ளனர்.

    இது ஒரு வாழ்வா சாவா போராட்டம்.. திருப்பூரில் கே எஸ் அழகிரி உருக்கமான பேச்சு! ஏன் என்னாச்சு? இது ஒரு வாழ்வா சாவா போராட்டம்.. திருப்பூரில் கே எஸ் அழகிரி உருக்கமான பேச்சு! ஏன் என்னாச்சு?

    நடைபயணம்

    நடைபயணம்

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லைக்கு வருகை தந்த கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போது, ஆளுநர் ரவி தனது வரம்பை மீறி செயல்படுவதாகவும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் கூட்டங்களை நடத்தி வருவதாகவும் கொந்தளித்தார். மேலும், புலனாய்வு பின்னணியை கொண்ட ஆளுநர் தமிழகத்துக்கு தேவையில்லை என ஏற்கனவே தாம் கூறியிருந்தது உண்மையாகி இருப்பதாக தெரிவித்தார்.

    ஸ்டாலினுக்கு புகழாரம்

    ஸ்டாலினுக்கு புகழாரம்

    இந்தியாவிலேயே பிரதமர் மோடியையும், பாஜகவையும் வலிமையாக எதிர்ப்பதில் முதன்மையான முதல்வர் ஸ்டாலின் என புகழாரம் சூட்டிய அவர் தமிழகத்தில் மதவாத சக்திகளை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஸ்டாலின் தலைமையில் ஒன்றுபட்டு நிற்பதாக கூறினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழற்றிவிடப்படலாம் என ஆருடங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் கூட்டணிக் கட்சியை தனது பேட்டி மூலம் இறுகப்பற்றியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி.

    சுதந்திரத்தில் பங்கு

    சுதந்திரத்தில் பங்கு

    இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்குண்டு என்றும் சுதந்திரத்துக்காக போராட்டம் நடத்தாத பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகள், இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுவதாக கூறுகிறார்கள் எனத் தெரிவித்தார். வீட்டுக்கு வீடு பிரதமர் மோடி தேசியக் கொடியை கொடுப்பதை தாம் வரவேற்பதாகவும் ஆனால் அதேவேளையில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் இரண்டு முறை மட்டுமே தேசியக் கொடி ஏற்றப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மதச்சார்பற்ற கொள்கை

    மதச்சார்பற்ற கொள்கை

    மேலும், மதச்சார்பற்ற கொள்கைகளில் ஸ்டாலின் மிகவும் உறுதிமிக்கவர் என்றும் அவர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இப்போதிருந்தே திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை காங்கிரஸ் நிர்வாகிகள் புகழத் தொடங்கியுள்ளனர்.

    English summary
    KS Azhagiri praises Mk Stalin: பிரதமர் மோடியையும், பாஜகவையும் வலிமையாக எதிர்ப்பதில் முதன்மையான முதல்வர் ஸ்டாலின் என கே.எஸ்.அழகிரி புகழாரம்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X