ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜய்.. நெல்லை பரப்புரைக்கு 51 நிபந்தனைகளுடன் அனுமதி - செங்கோட்டையன்
திருநெல்வேலி: நெல்லையில் விஜய் பரப்புரை செய்ய 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பொதுக்கூட்டம் நடத்தப்படும். விஜய் பரப்புரைக்கு மட்டும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படுகிறது சென்னையைத் தவிர மற்ற இடங்களில் பரப்புரை செய்ய பெரிய அளவில் பிரச்சனை இல்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியதாவது: மக்களைப் பொருத்தவரையிலும் நல்ல தீர்ப்பை எனது தொகுதியில் வைத்துக் கொள்வார்கள். தலைவர் பெயரால் எங்களைப் போன்றவர்கள் மட்டுமல்லாமல் எல்லோருமே 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பிருக்கிறது. இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் என அத்தனை பெரும் புதிய மாற்றம் வர வேண்டும் என்று விரும்புகின்றனர்.

திரைப்படத் துறையில் உச்சத்தில் இருப்பவர் அரசியல் பணியாற்ற ஒருவர் வந்திருக்கிறார். அவர் ஏன் வரக்கூடாது என்பது தான் கேள்வி. விஜய் வர வேண்டும், அவர் தான் நாளை நாட்டை ஆள வேண்டும் என்பதே மக்களின் ஆசை. அந்த கனவு கண்டிப்பாக வெற்றி அடையும். மற்ற கட்சிகள் என்ன விதிமுறைகளுக்கு உட்பட்டு பரப்பரை மேற்கொள்கின்றனர் என்று எல்லோருக்கும் தெரியும். எங்களுக்கு மட்டும் நிறைய தடைகளை விதிக்கின்றனர்.
அன்றைக்கு ஒவ்வொரு பகுதியிலும் கட்சித் தலைவரால் பேச முடியும். கூட்டம் இருந்தால் எழுந்து பேசலாம். இப்போது ஒரு கூட்டத்துக்கு மட்டும் தான் பேச சொல்கின்றனர். முந்தைய காலத்தில் ஜெயலலிதா 20, 30 கூட்டங்களில் பேசிவிட்டு வருவார். அந்த வாய்ப்பு இப்போது இல்லை. எல்லா இயக்கத்திலும் யார் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது, யாரை தொண்டர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் சீட்டு வழங்கப்படுகிறது. குறிப்பிட்டு ஒருவருக்கு கொடுக்கவில்லை, கொடுத்திருக்கிறோம் என்பது இல்லை.
நெல்லையில் விஜய் பரப்புரை செய்ய 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பொதுக்கூட்டம் நடத்தப்படும். விஜய் பரப்புரைக்கு மட்டும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படுகிறது சென்னையைத் தவிர மற்ற இடங்களில் பரப்புரை செய்ய பெரிய அளவில் பிரச்சனை இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications