திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகன் போல் என்னை அரவணைத்தார் நெல்லை கண்ணன்! திருமாவளவன் வேதனையுடன் இரங்கல்!

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழ்க்கடல் என்றழைக்கப்பட்ட நெல்லை கண்ணனின் மறைவு தனக்கு அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    நெல்லை கண்ணன் உயிரிழப்பு - ஆழ்ந்த சோகத்தில் தமிழ்நாடு

    தன் மீது பெற்ற மகனை போல் பாசம் காட்டி அரவணைத்தவர் நெல்லை கண்ணன் என திருமாவளவன் தனது நினைவுகளை பகிர்ந்தார்.

    காமராஜர் காலம் தொடங்கி இன்று வரை அனைத்து தலைவர்களுடனும் நெருங்கிப் பழகியவர் நெல்லை கண்ணன் என புகழாரம் சூட்டினார்.

    சமகால தமிழ்க்கடல் வற்றிவிட்டது.. நெல்லை கண்ணன் மறைவு குறித்து வைரமுத்து, சாலமன் பாப்பையா உருக்கம்! சமகால தமிழ்க்கடல் வற்றிவிட்டது.. நெல்லை கண்ணன் மறைவு குறித்து வைரமுத்து, சாலமன் பாப்பையா உருக்கம்!

     நெல்லை கண்ணன்

    நெல்லை கண்ணன்

    தமிழ்க்கடல் என்று அழைக்கப்பட்ட நெல்லைக் கண்ணன் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு செய்தியறிந்து இலக்கியவாதிகள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்த இரங்கலில், நெல்லை கண்ணனுக்கும் தனக்குமான தொடர்பு பற்றிப் பேசினார்.

    சனாதன எதிர்ப்பு

    சனாதன எதிர்ப்பு

    சனாதன எதிர்ப்பு கொள்கையில் மிக உறுதியோடு நின்றவர் நெல்லை கண்ணன் என்றும் மனுதர்மம் பற்றி தாம் பேசிய போது தனக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியபோது பக்கபலமாக நின்று ஆதரவு தெரிவித்தவர் நெல்லை கண்ணன் எனவும் திருமாவளவன் தெரிவித்தார். நெல்லை கண்ணனின் மறைவை பொறுத்தவரை ஈடு செய்ய முடியாது பேரிழப்பு எனக் கூறிய அவர் தன் மீது நெல்லைக் கண்ணன் காட்டிய அன்பை கண்டு தாமே பிரமித்துள்ளதாக தெரிவித்தார் திருமாவளவன்.

    மகனை போல்

    மகனை போல்

    தன்னை ஒரு மகனைப் போல் அரவணைத்து பாசம் காட்டியவர் நெல்லை கண்ணன் என்றும் அண்மையில் நெல்லை கண்ணனுக்கு விசிக முப்பெரும் விழாவில் காமராஜர் கதிர் விருது கொடுத்ததையும் நினைவு கூர்ந்தார்.ஆரம்பக்காலம் முதலே தன் மீது தனிப் பாசமும் அக்கறையும் கொண்டவர் நெல்லை கண்ணன் எனத் தெரிவித்தார்.

    பட்டிமன்றங்கள்

    பட்டிமன்றங்கள்

    நெல்லை கண்ணன் நடுவராக அமர்ந்து நடைபெறும் பட்டிமன்ற விவாதங்கள் எல்லாம் சிந்தனை தளமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. திருமாவளவனை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நெல்லை கண்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Thol Thirumavalavan Condolences to Nellai Kannan Death: தமிழ்க்கடல் என்றழைக்கப்பட்ட நெல்லை கண்ணனின் மறைவு தனக்கு அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X