கடையநல்லூர் முண்டகண்ணியம்மன் கோவிலுக்கு திடீரென வந்த விஜயகாந்த் மகன்!
நெல்லை: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள முண்டகண்ணியம்மன் கோவிலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் திடீரென வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இந்தப் பின்னணியில், தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் இன்று திடீரென்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முண்டகண்ணியம்மன் கோவிலுக்கு வந்தார்.

அவரது வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஷூ காலோடு ஆலய வளாகம் வந்த அவருக்கு ஆலய நிர்வாக பூஜாரிகள் மாலை அணிவித்து கும்பமரியாதை கொடுத்து வரவேற்றனர். ஷூவை கழட்டாத நிலையில் அவர் சாமி கும்பிட்டார். மதியம் சுமார் 2 மணி அளவில் கோவிலுக்கு வந்த அவர் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு தரிசனம் செய்துவிட்டு உடனடியாக மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

தேர்தல் நெருங்கி விட்டதால், சமீபகாலமாக தென் மாவட்டங்களில் உள்ள சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் அரசியல் கட்சி பிரமுகர்களின் குடும்பத்தினர் மற்றும் தலைவர்கள் வருகை அதிகரித்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் வருகை பரப்பரப்பாக பேசப்படுகின்றது.

-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications