திருநெல்வேலியில் சென்னை புதுமண தம்பதி.. பெட்ரூமை திறந்து பார்த்ததுமே.. ஆடிப்போன ஹவுஸ் ஓனர்
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு பகுதியில் சென்னையைச் சேர்ந்த புதுமண தம்பதியர் வீடு தேடினார்கள். அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வருவதற்காக உரிமையாளரிடம் பேசியுள்ளார்கள். அதன்படி கடந்த பிப்ரவரி 7ம் தேதி புதுமணத் தம்பதி வீட்டில் குடியேறி உள்ளார்கள். இந்நிலையில் வீட்டில் குடியேறிய இரண்டாவது நாளில் புதுமணத்தம்பதி எடுத்த முடிவு வீட்டின் உரிமையாளரையும் அந்த தெருவையுமே அதிர வைத்துள்ளது. என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு பார்வதி அம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டிற்கு சென்னையைச் சேர்ந்த புதுமண தம்பதியர், கடந்த பிப்ரவரி 7-ந் தேதி வாடகைக்கு குடியேறினர். வீட்டிற்கு புதுமணத்தம்பதி குடிவந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த வீடு நேற்று முன்தினம் மாலையில் இருந்து நேற்று மதியம் வரையிலும் பூட்டிக்கிடந்துள்ளது. ஆனால் வீட்டின் வெளிப்புறம் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது.

வீட்டிற்கு குடிவந்த இரண்டு நாட்களாக வெளியே வராததால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சந்தேகமடைந்தனர். தொடர்ந்து அந்த வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் 2 பேரும் தூக்கிட்ட நிலையில் கிடந்ததைப் பார்த்து ஆடிப் போனார்கள். இதுகுறித்து உடனடியாக வீட்டு உரிமையாளருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். வீட்டு உரிமையாளர் இதுபற்றி பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் 2 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தொடங்கினார்கள்.
அந்த விசாரணையில், இறந்தவர்கள் சென்னை ராயபுரம் துரை தெருவைச் சேர்ந்த முத்து என்பவருடைய மகன் விஜயன் (வயது 26), சென்னை திருவொற்றியூர் ஒண்டி குப்பத்தைச் சேர்ந்த காந்தி மகள் பவித்ரா (24) ஆகியோர் தான் என்பது தெரிய வந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறி 2 நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருநெல்வேலியில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளனர். ஆனால் திருமணமான இரண்டு நாளிலேயே உயிரை விட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக புதுமண தம்பதியரின் பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்களிடம் இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த 2 நாளில் தம்பதி உயிரைவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காதல் திருமணம் செய்பவர்கள் எதார்த்தங்களை உணர மறுக்கிறார்கள்.
வாழ்க்கையில் சவாலான நேரங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியாமல், பலர் முட்டாள்தனமாக முடிவெடுக்கிறார்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும் வாழ்க்கையை முடித்துக்கொள்வது நல்லது அல்ல.. இன்றைய 2 கே கிட்ஸ் இளைஞர்களில் சிலர், சரியான புரிதலுடன் வாழத் தெரியாமல் ஆத்திரத்திலும் அவசரத்திலும் முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இன்றைக்கு குழந்தைகளுக்கு கல்வியுடன், சவால்களை எப்படி எதிர்கொள்வது, பிரச்சனைகள் வந்தால் அதனை எப்படி கையாள்வது, அவமானம் வந்தால் அதனை எப்படி எதிர்கொண்டு வெல்வது என்பதையும் சேர்த்துக் கற்றுக் கொடுக்க வேண்டும்..
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications